பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - நாம் அறிந்த கி.வா.ஜ.

வேளையில் க்ாவேரிக் கரையிலுள்ள சுடுகாட்டிற்கு, அருகில் போவார். - - -

முதலில் பேய் என்ற உணர்வினால் இவரது உடம்பு நடுங்கும். பின்பு கண்ணை மூடிக்கொண்டு தம் கையில் வாள் இருப்பதாகவும், அந்த வாளை வீசிப் பேயை வெட்டித் தள்ளியது போலவும் பாவனை பண்ணுவார். கண்ணைத் திறந்துகொண்டும் அந்தப் பாவனையைத் திரும்பவும் செய்வார். இவருக்கே சிரிப்பு வந்துவிடும்.

இந்தப் பாவனைப் பழக்கத்தினால் பேய் பிசாசு என்கிற பயமே இவருக்கு நீங்கிவிட்டது. சந்திர விலாஸ்’

தமிழில் வரும் துப்பறியும் கதைகளையெல்லாம் படிப்பார். அ.மாதவையா, வ.வே.சு. ஐயர் போன்றவர் களுடைய கதைகளிலும் இவருக்கு ஈடுபாடு அதிகம். திரு.வி.க. அவர்களது வசன நடையை அடிக்கடி படித்து, அதுபோல எழுத வேண்டுமென்று ஆ ைச ப் பட் டு. முயன்றும் இருக்கிறார். - -

அக்காலத்தில் வெளிவந்த தமிழ்ப் புத்தகங்கள், பத்திரிகைகள் பலவற்றைப் படிப்பதோடு, அவற்றைச் சொந்தமாக வாங்கிச் ேச ர் த் து க் .ெ க | ள் ள வு ம். ஆரம்பித்தார். பழைய புத்தகங்கள், பத்திரிகைகள் எங்குக் கிடைத்தாலும் வாங்கிவிடுவார், -

கிழிந்த புத்தகங்களை ஒட்டித் தைத்து, அட்டை போட்டு,மேலே பெயர் ஒட்டி அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் இவர் மி கு ந் த க வ ன ம்

செலுத்தினார். -

தம்மிடமுள்ள புத் த கங்க ைள இவர், தாம் படித்ததோடு பிறருக்கும் படிக்கக் கொடுப்பார். இவரது நூலகத்திற்கு இவர் சூட்டியிருந்த பெயர் ஃபுல் மூன் லைப்ரரி ஆகும்: