பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலைமகள் மைந்தன் . 总8榜

சொல்லி இவர் தம் மனைவியுடன் பங்களுர் சென்றார். அப்போது ஐயரவர்கள் இவருக்கு எழுதிய கடிதங் களிலிருந்து ஆசான் இவரிடம் வைத்திருந்த அன்பின் பெருமை புலனாகும்: -

- .ெ தியாகராஜ விலாஸ் சிவமயம் 17 - 6 - 1935 14.ம் தேதி அனுப்பிய கார்டு 16-ம் தேதி பன்னிரண்டு மணிக்குக் கிடைத்தது. நானும், அன்பர்களும் எல்லாம். தெரிந்துகொண்டோம். என்னுடைய கால் பிணி சிறிது குணமாகி வருகிறது. சி. அண்ணா சென்ற வெள்ளிக் கிழமை காலையில் குழந்தைகளுடன் செளக்கியமாக வந்து சேர்ந்தார். து ைண வி யா கு ட ன் நீர் பங்களுருக்குச் சென்றிருப்பதைத் தெரிவித்தேன். சரியென்று சொன்னார். உமக்கு வரும் கடிதங்களை அவ்விடம் அனுப்பும்படி சி. வித்துவான் கணபதி ஐயரிடம் சொன்னேன். அவரும் இதோ இருந்து வேலை பார்த்து வருகிறார். உம்முடைய ஞாபகத்தைக் குறிப்பிட்ட எல்லோருக்கும் தெரிவித்தேன். அவர்களும் தங்கள் நலன் பற்றி விசாரித்தார்கள்.

அச்சாபீஸ் வேலைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. ஆற்றுார்ப் புராணம் குறிப்புரையுடன் இன்று அடுக்கிவரக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெருங்கதை’ப் பதங்கள் குறிக்கப்பட்டுச் சீட்டில் எழுதப்பெற்று வருகின்றன. -

பங்களுரில் பார்க்கக் கூடிய இடங்களைப் பார்க்கக் கூடுமே? மகா...ழரீ சர்மா அவர்களைப் பார்த்து இருக்கக் கூடுமே? அங்கே பார்க்க வேண்டிய காட்சிகளைப் பார்த்து விட்டு இங்கு நீர் வரும் காலத்தை அன்பர் எதிர் பார்க்கிறார்கள். சி.சுப்பிரமணிய ஐயருக்கு 19-ஆம் தேதி முதல் பள்ளிக்கூட ஆரம்பம். - -

இடைவிடாமல் உடனிருந்து இனிமையாகப் பேசிக் கொண்டிருந்த நீர் பிரிந்திருப்பது எனக்கு வருத்தமா விருக்கிறதென்பதை தான் எழுத வேண்டியதில்லை.