பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைந்தன் - - 394

ஆராய்ச்சி நூலைச் சமர்ப்பித்தாக வேண்டும். எழுதவும், படிக்கவும் இவர் மனம் பொருந்தவில்லை. இவர் படுகிற மன உளைச்சலை இவருடைய நண்பர் செல்லமையர்

உணர்ந்தார்.

இவரிடம் அவர் ஒரு நாள், நீ போய் மாப் பிள்ளையையும் சகோதரியையும் இங்கே அழைத்து வந்து

விடேன். அவருக்கு இங்கேயே வைத்தியம் செய்யலாம்’

என்று சொன்னார். அந்த எண்ணம் இவருக்கும் இருந்தது. ச்கோதரிக்கு அப்போது இரண்டு புதல்வர்கள்

(குழந்தைகள்) இருந்தனர். மனைவி, இந்த இரண்டு

பிள்ளைகள் தவிர மா ப் பி ள் ைள க்கு ச் சொத்தோ உறவினரோ இல்லை. அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து ைவத் துக் .ெ க | ள் வது என்றால் மோகனூரில் இருக்கும் தம் பெற்றோர்களும் இவருடன் இங்கு இருந்தால்தான் சாத் தி ய மா கும். இவர்கள் யாவரையும் சென்னையில் வைத்துக்கொண்டு குடும்பம்

நடத்தத் தம்முடைய சொற்ப வருமானத்தால் முடியுமா என்கிற மலைப்பு இவருக்கு இருந்தது. |

நண்பர் செல்லமையர் உயர்நிலைப்பள்ளி ஒன்றில்

வேலை பார்த்து வந்தார். இவரைவிட அவருக்குச் சம்பளம் அதிகம்; அதோடு தாத்தா சொத்தும் வைத்திருந்

தார்: இளமைமுதல் இவரது குடும்பத்தோடும் நெருங்கிப்

பழகியவர். அதனால், *நீ செலவைப்பற்றிக் கவலைப்

ய டா தே பார்த்துகொள்ளலாம். ஐயரவர்களிடம்

விஷயத்தைச் சொல்லிவிட்டு, புங்களுர் போய் அவர்களை

அழைத்து வந்துவிடு’ என வற்புறுத்தினார். -

இவர் இந்தக் கருத்தை ஐயரவர்களிடம் சொன் போது அவரும், :அதுதான் சரி’ என்று இவருக்கு அறிவுரை கூறினார். - - -

இவர் பங்களுர் போய் அவர்களைச் சென்னைக்கு

அழைத்து வந்தார். மோகனூரிலிருந்து தாய் தந்தை

பரும் சென்னை வந்தார்கள்.