பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 - நாம் அறிந்த கி.வா.ஜ.

உடல்நலமில்லாத மாப்பிள்ளைக்கு இங்கே தீவிர மருத் துவச் சிகிச்சை அளித்தனர் என்றாலும், வந்த சில நாட் களுக்குள் அவர் காலமானார். இது இவருக்கு ஏற்பட்ட பெருந் துன்பமாகும். -

நிராதரவான தம் ச ேகா த ரி யி ன் குடும்பப் பொறுப்பும் இவருடையதாயிற்று. ... . . . .

திருவல்லிக்கேணி, சுபத்திராள் தெருவில் கொஞ்சம். அதிக இடமுள்ள ஒரு வீட்டில் ஜாகையை மாற்றிக் கொண்டார். தம் தம்பியையும், மூத்த மருமானையும் இங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். தாய் தந்தையரும் இவருடன் தங்கினார்கள். - - இவ்வளவு இன்னல்களுக்குமிடையில் முகம் சுளிக்காமல் இவர் தம் வீட்டிற்கு வந்து பாடம் கேட்பதும், தாம் சொன்னபடி மகாவைத்தியநாதையரின் வரலாற்றை எழுதி வந்ததும் ஆசானுக்கு வியப்பை அளித்தன. தம் தாய் தந்தையரிடமும், சகோதரியிடமும் இவர் காட்டிய அன்பு, ஆசானது நெஞ்சை உருக்கியது. -

ஜேகந்நாதனைப் பார்த்தீர்களா? அவனைப் பிள்ளை யாகப் பெற அவன் பெற்றோர் தவம்தான் செய் திருக்க வேண்டும்’ எனத் தம் குடும்பத்தாரிடம் சொல்விச் ‘சொல்லி மகிழ்ந்தார். .

சென்னைப் பல்கலைக் கழக ரெஜிஸ்திராருக்கு அனுப்பும் தமது அறிக்கையில், இவர் என் வேன்ல களையும் கவனித்துக்கொண்டு நல்ல முறையில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது ஆராய்ச்சி திருப்தி கரமாக உள்ளது. இவரது ஆராய்ச்சி மாணவர் காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப் பெறலாம்’ எனக் கடிதம்

எழுதினார் ஐயரவர்கள்.

ஆசானுடன் பல இடங்களுக்குச் செல்லுதல்: -

அதன்பேரில் 27-8-36 முதல் மேலும் ஓராண்டுக்கு இவரது ஆராய்ச்சி மாணவர் காலத்தைச் சென்ன்ைப் பல்கலைக் கழகம் நீட்டித்துக் கொடுத்தது. . ... “...