பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 396

புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி விழாவுக்கு 17-9-35 - இல் த ைல ைம தாங்க ஐயரவர்கள் இசைந்தார். முன்கூட்டியே அதற்கு அவர் திருச்சி போய், புதுகோட்டை சென்றபோது இவரையும் உடன் அழைத்துச்

கல்லூரித் தலைவராக அப்போது இருந்த அன்பர் தியாகராஜையரின் வீட்டில்தான் இவர்கள் தங்கி

னார்கள், “. . . . .

தமிழ் தந்த பெருமானாகிய ரீமத் ஐயர் ஏடு தேடும் யாத்திரையில் போகாத இடங்களே இல்லை எனலாம். ஒரு முறை குன்றக்குடி சென்றிருந்தார். அப்பாப் பிள்ளை என்பவ்ர் அப்போது அந்த ஆதீனத்தில் கணக்க ராக இருந்தார். அவர் ஐயரவர்களிடம் ஒரு சுவடியைக் கொண்டுவந்து கொடுத்தார். சிலப்பதிகார மும் மணி மேகலை’ மூலமும் அதில் இருந்தது. திருத்தமான பிரதி களாக இருந்தன. . - -

இந்தச்சுவடி எங்கே கிடைத்தது?” என்றார் ஆசான்.

இங்கே அருகில் முதலைப்பட்டி என்ற ஊரில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் வீடு இருக்கிறது, அங்கே நூற்றுக் கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்’ என்றார் கணக்கர். .

அன்று பிற்பகலே குன்றக்குடி ஆதீனகர்த்தரின் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் ஐயரவர்கள், கவி ராயரின் வீட்டுக்குச் சென்றார். அதுமுதல் முதலைப்பட்டி யைக் கலைமகள் திருக்கோயில் கொண்டுள்ள தலம் என்றே அவர் குறிப்பிடுவார். - ---. - - .

புதுக்கோட்டைப் பக்கம் போகும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் முதலைப்பட்டிக்கும் போய்க் கவிராயர் வீட்டைப் பார்த்துவிட்டு வருவது ஐயரவர்களின் வழக்கம். . . . کار،... “ يت . . “