பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

497 நாம் அறிந்த கி.வா.க.

૨૪

முதலைப்பட்டி என்று பேச்சு வழக்கில் வழங்கு கிறார்கள்; அதன் இயற்கையான பெயர் மிதிலைப்பட்டி, ஐயரவர்கள் மிதிலைபட்டி என்றே எழுதினார்.

மிதிலைப்பட்டியிலிருந்த கவிராயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செவ்வூர், காரைச்சூரான்பட்டி முதலிய ஊர்களில் இருந்தார்கள். செவ்வூருக்கு ஆசான் போயிருக் கிறார்: காரைச்சூரான்பட்டி என்ற ஊருக்கு அவர் சென்றதில்லை. . . . . .

எனக்கோ தளர்ச்சி அதிகமாகிவிட்டது. சிற்றம் பலக் கவிராயர் குடும்பத்தின் ஒரு கிளை அந்த ஊரில் வாழ்ந்திருந்ததை அறிவேன். அங்கே சென்று பார்த்தால், சில நல்ல ஏடுகள் கிடைக்கலாம். நான் காரைச்சூரான், பட்டிப் புலவரின் வீட்டுக்குப் போனதில்லை. அது பெருங் குறையாகவே இருக்கிறது. மறுபடி இந்தப் பக்கம் வரும் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கப் போகிறது? இந்த முறை அங்கே போய் ஏடுகளைப் பார்த்து வர வேண்டும்’ என்று. இவரிடம் சொன்னார் ஆசான்,

அங்கே போவதற்குப் பாட்டை வசதி இல்லை என்கிறார்களே?” என்றார் இவர். . . . . . . . எண்பத்திரண்டு வயதிலும் ஆசானின் துணிவு:

ஒற்றையடிப் பாதை இருந்தால் போதும்; நாம் நடந்தே போய் வரலாம்’ எ ன் றார் ஆசான். எண்பத்திரண்டு வயசுக் கிழவர் பேசும் வார்த்தையாக அது இருக்கவில்லை! . . . . -

இந்த வயசில் அந்தப் பட்டிக்காட்டுக்கு எப்படிப் போய் வருவது?” என்று, கூட இருந்த ஒர் அன்பரும். சொன்னார்.

ஏன்? அங்கே யும் ம க் கள் வாழ்கிறார்கள் இல்லையா? என்னைப் போன்ற கிழவர்களும் இருப்பார் களே! அவர்கள் யாரும் புதுக்கோட்டைக்கு வந்து போகிறதே இல்லையா?” என்றார் ஆசான்.