பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399 - நாம் அறிந்த கி.வா.ஜ.

தெரிந்துகொண்டு, வரவேண்டும்” என மிகுந்த அன்போடு வரவேற்றார். - - - :தங்களிடம் இருக்கும் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க

வந்திருக்கிறேன்’ என்றார் ஆசான். - . . .

அதற்கென்ன, தாராளமாகப் பார்க்கலாம்: முதலில் நீராடி, உணவு அருந்திக் கொஞ்சம் இளைப்பாருங்கள். பிறகு ஏட்டுச் சுவடிகளைப் பார்க்கலாம் என்றார்

கவிராயர். - . -

அப்போது மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. காலையில் நீராட இ வ ர்க ள் புதுக்கோட்டையி லிருந்து புறப்பட்டுவிட்டார்கள் இல்லையா? ஐயரவர்கள் மிகவும் களைத்துப் போயிருந்தார். . . . . . . . . . . கி.வா.ஜ. தம் ஆசானுக்குப் படைத்த உணவு :

முன்பு இதுபோல் பழையகோட்டைக்குப் போயிருந்த போது ஆசானுக்குத் தம் கையினால் சமைத்து உணவு அளிக்கத் தக்க சந்தர்ப்பம் கிடைத்தும் தாம் அதை நழுவவிட்டது இவருக்கு அன்றுமுதல் ஒரு மனக் குறை பாகவே இருந்தது. அந்தக் குறையூைஇந்த முறை எப்படி யாவது போக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். அதற்கேற்றாற் போல் கவிராயரும், :பண்டங்க ளெல்லாம் தருகிறேன். இந்தப் பிள்ளை சமையல் செய்து விடுவாரில்லையா? முதலில் நீங்கள் போய் நீராடிவிட்டு வந்துவிடுங்கள்” என்றார். х . . .

கவிராயரின் வீட்டிலிருந்து அரைமைல் தூரம் சென்று கண்மாயில் (கண்வாயில்) ஆசானும் இவரும் நீராடி வந்தார்கள். - - - - w.

வேப்ப மரம் ஒன்றின் நிழலில் கவிராயர் ஒரு கயிற்றுக் கட்டிலைக் கொண்டு வந்து போட்டார். வெயில், நடந்த அலுப்பு, பசி எல்லாம் சேர்ந்துகொண்டதால் ஐயரவர்கள் கட்டிலில் படுத்துக்கொண்டார். -

கவிராயரின் விட்டுப் பெண்கள் அரிசி, பருப்பு எண்ணெய், காய்கறி எல்லாம் கொண்டு வந்து தந்தனர்.