பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கலைமகள் மைந்தன் - 40ፀ

அங்கேயே இவர் அடுப்பை மூட்டினார். பனஞ்சிராயைக் கொண்டுதான் மூட்ட வேண்டியிருந்தது. -

இவருக்குத் தம் ஆசான் பசியோடு இருக்கிறாரே என்கிற கவலை, ஒரு பக்கம்; அடுப்போ நன்றாக எரிய வில்லை. அடுப்புக்கு முன் குனிந்து ஊதினார். புகை கண்ணை அவித்தது.

நானும் உத்விக்கு வரட்டுமா?’ என்று கேட்டார் ஆசான். கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்த இவருக்குச் சிரிப்புத்தான் வந்தது. -

எனக்குச் சமைக்கத் தெரியாதென்று நினைக் கிறிரோ?’ என்றார் ஆசான். இவர் என்ன பதில் சொல்வார்? - . .

கவிராயரோ அடிக்கு ஒரு முறை உள்ளே இருந்தபடி, ஒன்றும் குறைவில்லாமல் நன்றாகச் சாப்பிட வேண்டும்’ என்று, குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

எப்படியோ இவர் ஒருவாறு சமையல் பண்ணி முடித்தார். இவரது மானத்தைக் காக்க நல்ல வேளையாக நெய்யும் தயிரும் இருந்தன. . --

மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இலையைப் போட்டு ஐயரவர்களைச் சாப்பிட அழைத்தார்.

“இரண்டு பேரும் ஒன்றாகவே உட்காரலாமே?’ ‘ என்றார் ஆசான்.

‘இல்லை, இல்லை’ என்று இவர் பரிமாறத் தொடங் størrrrr. - -

இலையில் சாதத்தை எடுத்து வைத்தார். அது வெறும் களியாக இருந்தது . . . . . . . . .

ஆசானோ சிரித்துக்கொண்டே, குழைவாக இருக் கிறது, உன் மனசுபோல’ என்றார். யாரையும் உற்சாகப் படுத்திப் பேசுவதில் அவருக்கு நிகர் அவரே! “ அவ்வைக்குச் சுட்டபழம் தந்தமைந்தன் - . அவதரித்த தமிழ்காட்டில் பிறந்தசெல்வன் செவ்வையுடன் ஏடுகனைத் தேடும்போது - செகக்காதன் சமைத்திட்ட குழைந்தசோறு