பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401. - தாம் அறிந்த கி.வா.ஜ.

பவ்வியமாய் உண்டு:தமிழ் இனிக்கு"தென்று.

பலகாலும் சரிபார்த்து அரும்பதங்கள் திவ்வியமாய் எழுதியவுடன் அச்சிலேற்றித்

திருப்பணிகள் செய்ததமிழ்த் தாத்தாவாழ்க” எனப் பாடல் பெற்ற நிகழ்ச்சியாக இதுவே அமைந்து விட்டது. “ . - -

எப்படியோ அன்று இவர் குழைத்துவைத்த் சோற்றையும், கொதிக்க வைத்த புளிச்சோற்றையும், :பேஷ்! நன்றாக இருக்கிறது’ என்று சொல்வி ஐயரவர்கள் உண்டார். பிறகு இவரும் சாப்பிட்டார். எஞ்சியவற்றைக் கவிராயரின் வீட்டுப் பெண்கள் உள்ளே எடுத்துச் சென்றனர்.

உண்ட பின் ஆசான் சிறிது நேரம் துயின்றார். வந்த அலுப்பினால் தூங்கினாரேயன்றி வேறு சமயமாக இருந்தால் ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார். தூங்கி எழுந்த பின் கவிராயர் சில ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து வைத்தார். கிடைத்தவற்றில் புறத்திரட்டு ஒன்றும், புல்வயல் குமரேசர் பணவிடுதுாது’ ஒன்றும் விசேஷமானவை.

வேறு சுவடிகள் இல்லையா?” என்றார் ஆசான். பரணியில் ஏதேனும் ஒன்றிரண்டு இருக்கலாம். ஏறி எடுக்கத்தான் ஆளைத் தேடவேண்டும்’ என்றார் கவிராயர், தயக்கத்துடன். - * •.

இதோ, இவர் சிறு பிள்ளைதானே! இவர் ஏறி எடுப்பார். இருக்கிற இடத்தை நீங்கள் காட்டுங்கள்’ என்று இவரை அனுப்பினார் ஆசான். -

பரண் மீது இவர் ஏறிப் பார்த்தும் உருப்படியாக எந்த ஏடும் அங்குக் கிடைக்கவில்லை. - - - “சிறந்த புகழ் பெற்ற இந்தப் புலவரின் வீட்டுக்கு நான் அந்தக் காலத்திலேயே ஏடு தேடி வந்திருக்க வேண்டும்:

  • டில்லித் தமிழ்ச்சங்க உ.வே. சாமிநாதையர் மலர்

-ஏ. டி.என். ராமசாமி