பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 杏{}密、

என்று ஆசான் கூறும்போது அவரது குரலில் ஏமாற்றம் தொனித்தது. -

கவிராயரின் வீட்டுப் பெண் பிள்ளைகளோ இவரைப் பார்த்து, ஏன் ஐயரே, உங்க சமையல் நல்லா இருக்கும் என்றல்லவா நாங்களும் சாப்பிடாமல் இருந்தோம், பெரிய, ஐயா இதை எப்படிச் சாப்பிட்டாக?’ எனக் கேலி செய்தார்கள். - -

இவருக்கோ அடுத்த கணமே, புதுக்கோட்டை போனால் போதும் என்றாகிவிட்டது! -

ஓர் இரட்டை மாட்டு வண்டியை அமர்த்திக்கொண்டு. இவர்கள் புதுக்கோட்டை வந்து சேர்ந்தபோது பொழுது சாய்ந்துவிட்டது. - - - மறு நான் காலை ஐயரவர்களைக் காண ரகுநாதையர் வந்தார். அவர் புதுகோட்டையில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர். அவரது காரில்தான் ஐயரவர்கள் ஒரு நாள் ஆத்தங்குடி போயிருந்தார். அங்குள்ள சநாதன தர்ம சபை விழாவுக்குத் தலைமை தாங்கிப் பேசினார்; சநாதன தர்மம்பற்றி இவரையும் அங்கே பேசப் பணித்தார். -

ஒரு நாள் பலவான்குடி போயிருந்தார்கள். அம்மையப்பர்” என்பதுபற்றி இவரை அங்கே பேசச் சொன்னார் ஆசான். புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி விழாவிலும் ஐயரவர்கள் தாம் தலைமை தாங்கிப் பேசிய அன்று இவரையும் அங்கே பேச அழைத்தார். இது ஆசானின் வழக்கம். - - ஆசானைப் போன்றதே இவரது பண்பும் : - இந்த நல்ல முறையைப் பின்பற்றி இவரும் தாம் பிற்காலத்தில் மேற்கொண்ட தொடர் சொற்பொழிவுக் கூட்டங்களிடையே தம் மாணவர்களையும் Ljev . இடங்களில் பேசச் சொல்லியிருக்கிறார். இதனால், படித்து வரும் மாணவர்களுக்குத் தாம் கற்றதைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் திறன் வளரும்; அவர்களை