பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 - நாம் அறிந்த கி.வா.ஜ.

உலகமும் அறிந்துகொள்ள அதுவே வாய்ப்பாக அமையும்: * என்பார் இவர். - , , , .

х х x புதுக்கோட்டையில் ஆசானுடன் தங்கியிருந்த சமயம். காலையிலேயே நீராடிவிட்டு ஜயரவர்கள் ஜபம் செய்து, கொண்டிருந்தார். . . . . . . . . . . . . . . . . . குடுமியாமலை போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாமா?’ என ரகுநாதையர் கேட்டார். - -- கரும்பு தின்னக் கூலியா? அவசியம் தரிசித்து. வருவோம்’ என்றார் தமிழ்த் தாத்தா. . .

அது தெரிந்துதானே கேட்கிறேன். தங்களை எங்காவது அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்றால் இரண்டு தந்திரங்கள் செய்யவேண்டும் ஒன்று, இன்ன இடத்தில் தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன: போய்ப் பார்க்கலாம்” என்றால் உடனே வந்துவிடுவீர்கள்: அல்லது, இன்ன ஸ்தலம் பழமையானது: வாருங்கள். பார்க்கலாம்’ என்றாலும் வந்துவிடுவீர்கள்’ என்று. ரகுநாதையர் சொன்னவுடன் எல்லோரும் சிரித்து. விட்டனர். .

x х - ,X தமிழ் நாட்டிற்கு வரும் பிற நாட்டார் இங்குள்ள திருக்கோயில்களைக் கண்டு பிரமித்துப் போகிறார்கள். ஊருக்கு ஊர் கோயில்கள் இருக்கின்றன. சமயா சர்ரியர்களாகிய நால்வர் அவதாரம் செய்த தலங்கள். அவர்களுக்கு இறைவன் அருள் பாலித்த இடங்கள், அவர்கள் இறைவனோடு ஒன்றிய புண்ணிய பூமிகள் என்பதாகப் பதின்மூன்று தலங்களைப்பற்றி அன்பர் கி.வா.ஜ., பிற்காலத்தில் எழுதினார். . . . . . . .

வெறும் தல மாகாத்மியங்களாக இராமல் பயணக் கட்டுரைகளைப் போல அமைத்துத் தம்முடைய உணர்ச்சி’

புெம் அவற்றில் இவர் வெளிப்படுத்தினார். இந்த