பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைந்தன் - 404,

நூலுக்கு இவர் சூட்டிய பெயர், வாருங்கள் பார்க்கலாம்” என்பதுதான். - * .

குடுமியாமலையில் இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. சிவபெருமானுக்குச் சிகாகிரீசர் என்பது திருநாமம். குடுமியார்மலை என்பதே குடுமியாமலை ஆயிற்று. பழைய

பல்லவர்காலத்து இசைக் கல்வெட்டும் சிற்பமும் உள்ள திருக்கோயில் அது. . . . . “

இவருடன் ஐயரவர்கள் இறைவனைத் தரிசனம் செய்துகொண்டு கோயில் சிற்பங்களையும், கல்வெட்டுக் களையும் கண்டு களித்தார். இந்தப் பெருமானுக்கு சிகா .கிரீசர் என்று ஏன் பெயர் வந்தது?” என்று அங்கிருந்

தவரின் வாயைக் கிண்டினார், -

கோவிலைச் சேர்ந்தவர்கன் சோன்னார்கள்: - ‘கோவிலில் பூஜை செய்யும் ஆதிசைவர் ஒரு கணிகையிடம் நட்புப் பூண்டிருந்தார். ஒரு நாள் இதை வனுக்கு அணியும் மாலையை அவளுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கியிருந்தார். அப்போது அவள் அதைச் சூடிக்கொண்டு மறுபடியும் கழற்றிப் பூக் கூடையில் வைத்துவிட்டாள். . , ,

‘அர்ச்சகர் அதைக் கொண்டு வந்து இறைவனுக்குச் சாத்திவிட்டார். யாரோ ஒரு பெரிய மனிதர் அப்போது சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தார். அவர் தமக்கு அளித்த பிரசாதத்தில் அந்தக் கேசம் இருப்பதைக் கண்டு. திடுக்கிட்டார். என்ன குருக்களே, இந்தப் பிரசாதத்தில் தலைமுடி இருக்கிறதே! என்றார். அர்ச்சகர் சிறிதும் தயங்காமல், ஆண்டவன் தலையில் குடுமி இருக்கிறது.

உங்களுக்குத் தெரியாதா? என்றார். -

அப்படியா? எங்கே மறுபடியும் கர்ப்பூர ஆரத்தி எடுங். கன்; நானும் அதைத் தரிசித்துக்கொள்கிறேன்’ என்றார். வந்த பெரிய மனிதர் அர்ச்சகர் திரும்பவும்;தீபாராதனை செய்தபோது இறைவனின் திருமுடியில் கேசம் இருப்பதை அங்கிருந்த பலரும் கண்டு வியந்தார்களாம். அதனால்,