பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 - - . - நாம் அறிந்த கி.வா.ஜ. .

இறைவனுக்குச் சிகாநாதர் என்ற திருநாமம் வந்தது’ என்றார்கள். . -

கணிகை, அர்ச்சகர் என்ெ றல்லாம் அவ்வூர்க்காரர் சொல்லி வரவே, இந்தக் கோவிலுக்கு என்று கணிகையர் இருக்கிறார்களா?’ என்று ஐயரவர்கள் கேட்டார். - திருக்கோவிலில் கணிகையர் தொண்டு புரிந்து வந்த்தைத் தடுக்கச் சட்டம் வராத காலம் அது ஆகவே, சிவாசாரியார், இரு க் கி றார் க ள் எ ன் றார்.

வயசானவர்களா? இளையவர்களா?’ - சிவாசாரியார் சிரித்தபடியே, இளம் பெண்களும் இருக்கிறார்கள். மு. தி ய வர் க ளு ம் இருக்கிறார்கள்’ என்றார். - அப்படியா? நான் பார்க்கவேண்டுமே; முதியவர்

யாரையேனும் வருவியுங்கள் என்றார். நம் ஆசான்.

அருகில் இருந்தவர்கள், ‘ஏன் இவ்வாறு கேட்கிறார்?’ என்று தெரியாமல் விழித்தார்கள். -

சிறிது நேரத்தில் ஒரு முதிய கணிகை வந்தாள். தானிக் கோணிக்கொண்டு கம்பத்தின் ஒரமாக நின்றாள். ஐயரவர்கள் அந்த மாதைப் பார்த்து, நீ இந்தக் கோவிலில் எவ்வளவு காலமாகப் பணி செய்கிறாய்?” என்று கேட்டார். -

ஏதோ பழைய செய்தியைப்பற்றித்தான் ஐயரவர்கள் கேட்கப் போகிறார் என்பதை அன்பர் கி.வா.ஜ. உணர்ந்து அவள் சொல்வதை எழுதிக்கொள்ளத் தயாரானார்.

பரம்பரை பரம்பரையாக நாங்கள் இந்தக்கோவிலிலே. தான் தொண்டு செய்து வருகிறோம்’ என்று அவளிட மிருந்து விடை வந்தது. -

நீ தட்டெடுப்பது உண்டா?

உண்டு. “ உனக்கு இந்த ஊர் உலா வருமா?” அப்படி ஒன்றும் எனக்குத் தெரியாதே'