பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கலைமகள் மைந்தன் 406

தெரியாவிட்டால் குற்றம் இல்லை. தட்டு எடுக்கும் போது பாட்டுப் பாடுவாயே; அதைச் சொல்’ என்று கேட்டார் நம் ஆசான். - -

முதலில் மெல்லிய குரலில் பாடிய அந்த மாது பிறகு மிடுக்காகவே பாடினாள். அந்தத் தலத்தைக் குறித்து அவள் பாடிய பாடல்கள்பற்றிய குறிப்புகளை இவர் எழுதிக் கொண்டார். ~ - -

அவள் போகும்போது ஐயரவர்கள் அவளுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பல இடங்களில் சுவாமி பெயர், அம்மன் பெயர் தமிழில் தெரிவதில்லை. இவர்கள் பாடும் பாடல்களிலே தான் நல்ல தமிழ்ப் பெயர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. தேவார தலபுராணப் பிரபந்தப் பாடல்களில் வரும் குறிப்புகளும் நுட்பங்களும் இவர்களுடைய வாய் மொழிப் பாடல்களால்தான் தெளிவாகின்றன. இங்கே வந்ததன் பயனாகச் சுவாமிதரிசனம் கிடைத்தது; பழம் பாட்டுக்கள் சில கிடைத்தன’ என்றார் ஐயரவர்கள்.

காரில் திரும்ப வருகையில் அத்தல இலைவனுக்குச் சிகாநாதர் என்ற திருநாமம் வந்தது.குறித்துப் பேச்சு எழுந்தது. . . . . . .”

உடனே ஐயரவர்கள், இந்த நாட்டில் ஒரேமாதிரிக் கதைகள் பல இடங்களில் இப்படியே வழங்குகின்றன. சவரிராஜப் பெருமாள் கோவிலிலும் இப்படி ஒரு கன்த வழங்குகிறது. பழங்காலத்தில் மலையின் சிகர்த்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் குடுமித்தேவர் என்று வழங்குவது உண்டு. காளத்தி மலையின்மேல் உள்ள இறைவைனக் குடுமித்தேவர் என்று பொதுமக்கள் வழங்கினார்கள் என்பதைச் சேக்கிழாரின் பெரிய புராணத் தால் தெரிந்துகொள்கிறோம். அதுபோன்றே இதுவும் வந்திருக்க வேண்டும். குடுமி என்பது மலைச் சிகரத்துக்குப் பெயர்’ என்றார்.