பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 நாம் அறிந்த கி.வா.ஜ.

அவரைத் தமக்கு வழிகாட்டும் பேராசிரியராகக் கொண்டிருந்த காரணத்தினால் அதே பழக்கம் இவரிடமும்

இருந்தது. , “ , ” . -

சமயச் சொற்பொருளாற்றும்போதுகூட இவர் புராணக் கதைகளையும் அறிவுக்கண் கொண்டே அணுகுவார். - விசித்திரமான அநுபவங்கள் :

ஒரு நாள் இவர் கலைமகள் ஆபீசில் இருந்தபோது சிலபேர் வந்தார்கள். அதில் நடுநாயகமாக ஒருவர் இருந்தார். அவர் பெரிய மகான் என்றும், அவரைப் பற்றிப்பத்திரிகையில் எமுத வேண்டுமென்றும் வந்தவர்கள் சொன்னார்கள். - -

இவர் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண் டிருந்தார். திடீரென்று அந்த மகான், நான் இன்னார் என்று உனக்கு இன்னும் தெரியவில்லையா? முட்டாள்! நானேதான் ஈசுவரன், என்னை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொள்’ என ஆவேசம் வந்தவர் போல ஆணை யிட்டார். - - - : - -

அவருடன் வந்தவர்கள் எல்லாம் பக்தி பரவசத்தோடு அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டுக் கொண்டனர் . இவரோ அசையவில்லை. சிரித்துக்கொண்டே பர்லைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார். இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் எங்கள் பத்திரிகையில் ‘. . எழுதுவதில்லை. நீங்கள் போய் வாருங்கள் எனச்

சொல்லி அனுப்பினார். - - *

- X . . . . ; 3. . . . х , மற்றொரு சமயம் ஒரு வைஷ்ணவர் வந்தார்: “நான் தான் விஷ்ணு. உங்களுக்கு வேண்டிய வரம் தருகிறேன். இப்போது கேளுங்கள்: உடனே தருகிறேன்’ என்றார்.

இவர் சிரித்துக்கொண்டே, இப்போது எனக்கொரு நெல்லிக்காய் வேண்டும்’ என்று கேட்டார்.