பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்” மைந்தன் - 40 &

வந்தவரால் கொடுக்க முடியவில்லை. திருதிருவென விழித்தார்; உங்களிடம் என் ஜம்பம் பலிக்குமா?’ எனச் சொல்லிக்கொண்டு போய்விட்டார்! -

இதுபோல் மற்றொருநிகழ்ச்சி: பிற்காலத்தில் இவரிடம் மிகவும் அன்பு கொண்ட கணேசன் என்பவர் டாக்ளியில் மோகன் என்கிற பையனை அழைத்து வந்தார். கூடச் சிலர் வந்திருந்தார்கள். அந்தப் பையனிடம் முருகன் அற்புதம் நிகழ்த்துவதாகச் சொன்னார்கள். .

கொஞ்சம் தியானம் செய்வதுபோல இருந்த அந்தப் பையன் திடீரென ஒரு லட்சுமி விக்கிரகத்தைக் கக்கினான். பார்த்தீர்களா, இவரது பெருமையை? உங்களுக்கு லட்சுமியே வந்திருக்கிறாள். வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அவனுடன் வந்தவர்கள் சொன்னார்கள்.

இவருக்குக் கோபம் வந்துவிட்டது: “உங்கள் சுயலாபத்திற்கு இந்தப் பையனுடைய வாழ்வைக் குலைத்து விடாதீர்கள்’ என்று அவர்களைக் கடிந்துகொண்டார். அவன் கக்கிய விக்கிரகத்தையும் எடுத்துப் போகும்படி சொன்னார். வண்டிச் சத்தமும் கொடுத்து அனுப்பினார். அன்று இவருக்கு இருபது ரூபாயாவது தண்டமாயிருக்கும். மன நெகிழ்வு : . . இவர் எப்போதுமே நெகிழ்ந்த மனம் உடையவர். தாயில்லாப் பூனைக் குட்டி ஒன்று இவருடைய வீட்டில் இறந்துவிட்டது. இவர் அதைத் திருப்புகழ் ஓதித் தம். வீட்டுக்குமுன் அடக்கம் செய்தார். . -

தம்மிடம் ஊழியம் செய்யும் கோவிந்தன் என்பவரின் தாயில்லாப் பெண்ணுக்குத் தாமும் தம் மனைவியும் மணையில் அமர்ந்து திருமணம் செய்து வைத்தார். இவருக்குக் கொஞ்சமும் பிடிக்காதது பொய். அதுவும் மதத்தின் பெயரால் தெரிந்தோ, தெரியாமலோ மக்களிடம் சில கொாக்களி வித்தைகளைக்காட்டி அச்சம்