பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.09 - நாம் அறிந்த இ.வா.ஜ.

உண்டாக்கி, தவறான எண்ணங்களைத் தூண்டுகிறவரி களிடம் இவர் நெருங்கினதில்லை. - செப்பிடுவித்தையில் ஈடுபாடற்ற தன்மை :

ஒரு நாள், நெருங்கிய நண்பர்கள் சிலர் இவரிடம் வந்தார்கள். கீழை நாடுகளுக்கெல்லாம் போய்ப் புகழுடன் சென்னை திரும்பிய சுவாமிகள் ஒருவருக்கு மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இவரைப் பேச அழைத்தார்கள். -

‘நான் அந்தச் சுவாமிகளை ஒரு முறைகூடப் பார்த்த தில்லை. வேறு யாரையேனும் அழையுங்கள்’ என்றார் இவர்.

அந்தச் சுவாமிகள் செய்யும் சித்து விளையாட்டுகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அவரைப் பார்க்க நாங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்’ என்றர்ர்கள் சிலர்.

சாதகராக இருக்கும் நிலை மாறிச் சாத்தியத்தை அடைந்த அநுபூதி மகான்களோடு இவர் நிறையப் பழகியிருக்கிறார். -

“இந்தச் சித்து விளையாட்டுக்களை நான் மதிப்ப தில்லை. உள்ளே இருப்பதுதான் வரும். ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் இதைக் காலணா வித்தை என்றுதான் நகையாடியிருக்கிறார்’ என்று எவ்வளவோ சொன்னார். வந்தவர்கள் இவரை விடுவதாக இல்லை. - அன்றைய தினம் மாலையே அந்தச் சுவாமிகளின் சீடர் ஒருவரது வீட்டுக்கு இவரை அழைத்துச் சென்றார்கள். அந்தச் சீடர் இவரிடம் தம் பூஜையில் இருந்த ஒரு வேலினை எடுத்துக் காட்டினார். இது இறைவனே எனக்குத் தந்த வேல்; இது தங்க வேல்: என்றார்.

“இது தங்கந்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று இவர் கேட்டார்.

“தட்டானை அழைத்து வந்து உறைத்துப் பார்த் தேன்’ என அவர்சொன்னதும் இவருக்குக் கோபம் வந்து விட்டது; இறைவன் கொடுத்த வேலையே உறைத்துப் தா-26 . 3 *