பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைத்தன் 416

ஆகிய பாடல்களை அவரருகில் உட்கார்ந்து இவர் பாடுவார். நோயினால் உண்டான துன்பம் கொஞ்சம் குறைந்தவுடன், நீ எழுது, போ. நான் கொஞ்சம் தூங்குகிறேன்’ என்பார் தாயார். -

1946 ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு தாயாரின் உடல் நிலை மோசமாயிற்று. இவரை அழைத்துப் பிராயச்சித்தம் செய்யச் சொன்னார். தாயார் தாமே எழுந்து உட்கார்ந்து அந்தணர்களுக்குத் தட்சிணை முதலியவை கொடுத்தார். - - -

மறு நாள் இரவு ஒரு மணிக்கு நினைவு தப்பியது. இவர் தம் அன்னையாரின் வாயில் கங்கை நீரை விட்டுக் கொண்டே, முருகா, முருகா’ என்று சொல்லிக் கதறலானார். அன்னையாரின் உடம்பு அப்படியே விறைத்துப் போய்விட்டது, மூச்சும் நின்றது. இவரோ அன்னையின் உடம்பில் திருநீற்றைப் பூசித் திருப்புகழ் பாடினார். - . .

இரண்டு நிமிஷம் அப்படியே இருந்த அன்னையாரின் உடம்பில் மீண்டும் உயிர் வந்துவிட்டது. மறுபடியும் கண்ணை விழித்துக்கொண்டார். மிக அற்புதமான நிகழ்ச்சி: திருப்புகழின் பெருமை என்றுதான் இவர் நினைத்தார். - -

இவருடைய அன்னை யார் அன்று பிழைத்துக் கொண்டார். - - அடுத்த ஒரு வாரம் இவருடைய அன்னையாரின் உடல் நிலை ஒருமாதிரி இருந்து வந்தது என்றாலும், உடல் தேறவில்லை. ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலை 7 மணி முதல் சுவாசம் வாங்கத் தொங்கியது, ஆனால் நினைவு தப்பவில்லை. அன்னையார் மெல்லப் பேசினார்; திருப் புகழ் பாடினார்; இவர் முருகனுக்குத் தீபாராதன்ை செய்யும்போது தாமே கை குவித்துக்கொண்டார். - மறு நாள் காலை. இவரும் இவருடன் குடித்தனம். இருந்த நண்பரும் குடித்தனக்கார தண்பரும் பேப்பரைப்