பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைந்தன் - - 41 &

இழந்துவிடும் மனவலிமை இத்தனையும் வேண்டும். இத்தகைய மனத் திட்பம் சிறப்பாக, நம் கி.வா.ஜ., அவர்களிடமே இருந்தது’ என இவருடைய நண்பர் ச. கு. கணபதி ஐயர் குறிப்பிட்டுள்ளார்.” -

“எழுத அமர்ந்தால் கி.வா.ஜ - வின் மணிமணியான எழுத்து, தட்டுத் தடங்கலின்றி, அடித்தல் திருத்தமின்றி ராஜதானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் என இவரது எழுத்தாற்றலைப்பற்றிக் கா. பூரீ. ரீநிவாசாசாரியார் சொல்வார். - - .

இதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஒன்று உண்டு: இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தியானம் செய்வார்: இந்தப் பழக்கத்தால், மனவொருமைப்பாடு இவரிடம் அதிகம் காணப்பட்டது. ரீமத் ஐயரது ‘குறுந்தொகைப் பதிப்பில் இவர் ஈடுபட்டு வந்தபோது அத்தகைய மனப்பாங்கு இவரிடம் காணப்பட்டது. ஏன், சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்த இவர், தாம் எழுதியாகவேண்டிய ஆராய்ச்சி நூல் காவியம் பற்றிக்கூடத் துளியும் கவலைப்படவில்லை. குறுந்தொகை'யை பதிப்பிக்கச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ரீமத் ஐயருக்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய்’ பொருளுதவியில் ஐந்நூறு ரூபாயை முன்தொகையாகக் கொடுத்துவிட்டார்கள். இவ்வளவு ஆண்டுகளாக பூரீமத் ஐயர் பதிப்பித்து வந்த நூல்களுக்கு இதைப்போன்ற நிதி உதவி கிடைத்ததே இல்லை. தமிழ்ப் பாடப் புத்தக சபையின் தலைவராக அப்போது இருந்த டி.சிவராமசேதுப் பிள்ளை அவர்களின் முயற்சியினால்தான் பூரீமத் ஐயருக்கு இந்த உதவி கிடைத்தது. - பூரீமத் ஐயர் எப்போதோ குறுந்தொகை’ யைப் பதிப்பித்திருக்க முடியும். சிந்தாமணி’ யை முதன்முறை பதிப்பிக்கும்பொருட்டு அவர் ஆராய்ந்துகொண்டிருந்த

  • வாழும் தமிழ், 1966.