பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைந்தன் - 420

குறிப்பிட்டுள்ளார். வே த த் ைத ப்ப ற் றி ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவர், பிறப்பால் வைணவர்: தமிழர். என்றாலும், எங்கெங்கே அறிவு உண்டோ அதை ஏற்றுக்கொள்பவர். சைவ சித்தாந்த நூலையும் மொழி பெயர்த்திருக்கிறார்: பெளத்த மத நூலையும் தமிழாக்கி யிருக்கிறார். பரந்த மனப்பான்மை உடையவர்: ஆனால் பிழையைக் கண்டால் பொறுமையை இழந்துவிடுவார்’ எனஅன்பர் கி.வா.ஜ.* கலைமகளில் 1973-இல் கா.ஆர்.புரீ. ஓய்வு பெற்றபோது பாராட்டியிருக்கிறார்.*

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் பி .ெ மா ழி களிலிருந்து தமிழுக்கும் இலக்கிய இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியவர் கா. ரீ.பூரி. அவரைத் தம் நண்பராகப் பெற்றதில் இவருக்குப் பெருமிதம் உண்டு.

காக்திதாத்தாவும் தமிழ்த் தாத்தாவும் -

பாரதீய லாஹித்ய பரிஷத் மகாநாடு ஒன்று, சென்னை ஹிந்திப் பிரசார சபையில் 1987-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் கூடியது. அதோடு அகில ஹிந்தி லாஹித்ய ஸம்மேளனமும் நிகழ்ந்தது. தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் அம்மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். காந்திஜீயுடன் காகா சாகேப் காலேல்கர் போன்ற பெரிய தலைவர்களும், பலமொழிப் புலவர்களும் விஜயம் செய்தனர். - -

அம்மகாநாட்டிற்கு வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தார்கள். மகாத்மா காந்தி அடிகள் தலைமை தாங்கும் அம்மகாநாட்டில் அவருக்குத் தக்க” வகையில் வரவேற்பளிக்க ஒரு தலைவர் வேண்டும்.

இந்திய இலக்கிய மகாநாடு அது. அரசியல் சம்பந்தம் இல்லாத இலக்கியப் பெரும்புலவர் ஒருவரையே வரவேற்புத் தலைவராக அமைக்க வேண்டுமென்று ராஜாஜி, கல்கி” போன்ற பலரும் கருதினார்கள். பூரீமத் ஐயரைத் தலை

  • கலைமகள், மார்ச் 73