பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 422

ஒரு நாள், ஹரிஹர சர்மா, அன்பர். கா.g g-ய்ை அனுப்பி வைத்தார். அவருக்கு அப்போது வயது இருபத்து மூன்றுதான் இருக்கும். தட்சிண பாரத அறிந்திப் பிரசார சபையில் வேலை பார்த்து வந்தார்; மிகவும் மெலிந்த உடலும், எளிய உடையும், அடக்கமான தோற்றமும் உடையவராக இருந்தார். ரீமத் ஐயரை வணங்கிவிட்டு அவரது உரையை ஹிந்தியில் மொழிபெயர்க்கத் தம்மை அனுப்பியிருப்பதாக அவர் சொன்னார். அதிகம் பேச வில்லை. - - . -

பூரீமத் ஐயர் அவருடன் சிறிது நேரம் பேசினார்.

முடிவில் அன்பர். கி.வா.ஜ.வுடன் இருந்து தம்முடைய வரவேற்புரையை மொழிபெயர்க்கும்படி அவருக்குச் சொன்னார். -

பொதிய மலை போன்ற ஆஜாதுபாகுவான தமிழ்த் தெய்வம் ரீமத் ஐயரது உருவத்துக்கு நேர் எதிராக அகத்திய முனிவரைப்போல் இருந்த இவரைப் பார்த்த போது, இவரிடம் காபூர். சி-க்கு முதலில் மதிப்பு உண்டாகவில்லை; இவரது முகத்தில் புலவர்களுக்குரிய காம்பீரியமோ, பெருமிதமோ இல்லையே! இவரா

பெரும்புலவர்?’ எனத் திகைத்தார். - -

இவர் அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு. வந்தார். அப்போது திருவல்லிக்கேணி, சுபத்திரான் தெருவில் இவர் ஜாகை இருந்தார், அந்தச் சிறிய வீட்டில், இவருடைய தாய், தந்தை, மனைவி, தம்பி, தங்கையர் இருவர். மருமான்கள் இரண்டு பேர் இத்தனை பேரும் இருந்தனர்.

இவர் கா. பூரீ.பூரீ.யைத் தம் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னார்: ஆன்றைய பிற்பகலுக்குள் அவர் ஹிந்தி மொழிபெயர்ப்பை முடித்துவிடுவதற்கு உதவியாக இருந்தார். ஹரிஹர சர்மாவும் மறு நாளே அதை அச்சிட்டுவிட்டார். <