பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

任罗3 நாம் அறிந்த கி.வா.ஜ.

பாரதீய ஸாஹித்ய பரிஷத் மகாநாடு துவங்குவதற்குச் சற்று முன்னதாக ராஜாஜி பூரீமத் ஐயரை மகாத்மா காந்தியிடம் அழைத்துச் சென்றார். - “பிச்சைப் பாட்டு'ம் ராஜாஜியும்:

ராஜாஜிக்கு எப்போதுமே ரீமத் ஐயரிடம் தனி மதிப்பு உண்டு. - - - ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்தது கலைமகளில் ஐயரவர்களின் கட்டுரை ஒன்று: அது பிச்சைக்காரன். பாடிய ஒரு பாட்டுப் பற்றியது. சந்திரகேகர கவிராஜ பண்டிதர் என்பவருக்குச் சுவையான தமிழ்த் தனிப் பாடல்களில் விருப்பம் அதிகம். யார் எந்தப் பாடலை எங்கே சொன்னாலும் அதைப் பொறுமையோடு கேட்டு எழுதிக்கொள்வார். அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துத் தனிப்பாடல் திரட்டு என்ற நூலைப் பதிப்பித்தும் இருக்கிறார். - - - - சென்னை வண்ணாரப்பேட்டையிலே சந்திரசேகர கவிராஜ பண்டிதர் வசித்துக்கொண்டிருந்தார். இராப் பிச்சைச்காரன் ஒருவன் தினந்தோறும் வெண்ணிலாப் பாட்டு, தெம்மாங்கு, பராபரக்கண்ணி முதலியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சொல்லிக்கொண்டுதான் அவர் வசித்து வந்த தெரு வழியே பிச்சை வாங்கிப் போவான்.

ஒரு நாள் இரவு நிலா நன்றாகக் காய்ந்துகொண் டிருந்தது. ஊரைச் சுடுமோ, உலகம் தன்னைச் சுடுமோ?’ என்கிற பாட்டின் அடியைச் சொல்லிக்கொண்டு அந்தப் பிச்சைக்காரன் வந்தான்.

கவிராஜ பண்டிதர் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தார் அவன் சொன்ன வரியை எழுதிக்கொண்டு மேலே என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தார். - . . . - - : : - ; அவன் அந்த ஒரடியையே திரும்பத் திரும்பச் சோல்லிக்கொண்டே போனான். ஒரு தெரு முழுவதற்கும் அவனுக்கு அந்த ஒரு கண்ணியே போதுமானதாக