பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் . . - 424.

இருந்தது. கவிராஜ பண்டிதருக்கோ இருப்புக் கொள்ள வில்லை. அவனுக்குப் பின்னால் சென்றார். - அவன் அடுத்த தெரு தோக்கித் திரும்புவற்குள் அவனைக் கூப்பிட்டார். உனக்கு இந்தப் பாட்டை யார் சொல்லிக் கொடுத்தது?” என்று கேட்டார்.

ஒரு கிழவனார் சொல்லிக் கொடுத்தார்’ என்றான் அந்தப் பிச்சைக்காரன். எங்கே, அந்தப் பாட்டு முழுவதையும் சொல்லேன்’ எனக் கவிராஜர் அவனை வேண்டினார். அவன் முதலில் சொன்ன அடியையே திரும்பச் சொன்னான். மேற்கொண்டு வர வில்லை.

கசாமி, என்னை விடுங்க! பாட்டு தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை’ என அவன் ஆழ்மாட்டாக் குறையாகச் சொன்னான்.

ாஇன்று நீ மேற்கொண்டு எங்கும் போகவேண்டாம். உன் சாப்பாட்டிற்கு நான்வழி பண்ணுகிறேன். கொஞ்சம் நினைத்துப் பார்த்து, அந்தப் பாட்டு முழுவதையும் சொல்லேன்” எனக் கவிராஜர் அவனை வேண்டினார். அவன் சொன்ன பாடல் இதுதான்: -

ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ ஆரைச் சுடுமோ அறியேனே-நேரே . . . . . பொருப்புவட்ட மானங்கில் பூங்கொடியிர் இந்த நெருப்புவட்ட மான கிலா.’ - இந்தப் பாடலை வைத்துப் பிச்சைப் பாட்டு: என்ற தலைப்பில் ரீமத் ஐயர் கலைமகளில் எழுதிய அக் கட்டுரையைப் படித்துவிட்டு, ராஜாஜி அவர்கள், ஆனந்தம் தாங்காமல், என்ன ரசம், என்ன அழகான கதை : என்பதாக பூர்மத் ஐயருக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தார். டிரீமத் ஐயரிடம் எப்போதுமே அவருக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. -