பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 தாம் அறிந்த கி.வா.ஜ.

பாரதீய லாஹித்ய பரிஷத்தின் மகாநாடு துவங்கு வதற்குச் சற்று முன்னதாக ராஜாஜியே ரீமத் ஐயரை மகாத்மா காந்தியிடம் அழைத்துச் சென்றார். ரீமத் ஐயருடன் இவரும் சென்றார். - -

தமிழுக்காகப் பணியாற்றிவரும் பெரியவர்களில் முக்கியமானவர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள்’ என்பதாக இவரைப் பிற்காலத்திலும் ராஜாஜி பாராட்டியிருக்கிறார்.* முன்பு ஒரு சமயம் பூரீமத் ஐயர் ராஜாஜிக்கு இவரை முதன் முறையாக அறிமுகப்படுத்தி வைத்தபோது, “மிக நல்ல பையன். எனக்கு இவன் செய்துவரும் தொண்டு விலையற்ற தொண்டு’ என்றாராம். அந்த நிகழ்ச்சியை ராஜாஜி மறக்கவில்லை.

அன்று ரீமத் ஐயர் மகாதேவ தேசாயியைக் காட்டி, :இவர் யார்?” என்று கேட்டபோது, ஐயரிடம் இவரைக் காட்டி, இவர் உங்களுக்கு எப்படியோ, அப்படி மகாத்மா காந்திக்கு இவர். இவர்தாம் மகாதேவ தேசாய்’ என்று சிசித்துக்கொண்டே சொன்னாராம் ராஜாஜி.

பூரீமத் ஜயரின் முகம் மலர்ந்தது. திரும்பிப் பார்த்து. இவரது கையைப் பிடித்துக்கொண்டு மகாத்மா காந்தி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்ற்ார். அந்த ஒரு கணம் இவரது உடம்பெல்லாம் புல்லரித்தது. தம் ஆசிரியப் பிரானின் அருளால் தமக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்தவுடன் இவருடைய விழிகளில் கண்ணிர் முட்டியது. * .

மகாநாடு துவங்கியவுடன் பூரீமத் ஐயர் வாய்மொழி யாகச் சிலவற்றைப் பேகிவிட்டு, “என்னுடைய வரவேற்புப் பிரசங்கத்தை இவர் படிப்பார்’ என இவரை ஏவினார். இவர் அதை மிடுக்குடன் படித்தார். தமிழ் புரிந்தவர் அங்கங்கே கைதட்டினார்கள். ஹிந்தி மொழிபெயர்ப்பை ஹரிஹர சர்மா வாசித்தார். ஹிந்தி தெரிந்தவர்னெல்

கலைமகள்” ஏப்ரல் 1966 - r 27 ماسبيstr