பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆器岔 * - நாம் அறிந்த கி.வா.ஜ.

வர்களின் செயல்கள் இவரது உள்ளத்தை வெகுவாகப் பாதித்ததில்லை. யாரிடத்தும் எவ்விடத்தும் இவர். நல்லதையே பார்க்கப் பழகியிருந்தார். - . சென்னைக் கம்பர் கழகத் தொடக்கம் :

சென்னையில் கம்பன் கழகம் தொடங்கியதிலிருந்து இவர் அதன் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கம்பன் விழாவில் பட்டி மண்டபம் என்றால் அதற்கு நடுவராகப் பெரும்பாலும் நீதிபதி மு. மு. இஸ்மாயீல் தாம் இருப்பார். - . . . . . ஒராண்டு கம்பன் விழாவில் நடக்கவிருந்த பட்டி மண்டபத்திற்கு நீதிபதி மு. மு. இஸ்மாயீலை, நடுவராக இருக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர முடியாது போயிற்று. . . . .” -

அந்த நிலையில் இவர் ஒருவரே அன்றைய பட்டி மண்டபத்துக்கு நடுவராக இருக்க முடியும் என்பதைக் கம்பன் கழக நிர்வாகிகள் உணர்ந்து, இவரை நடுவராக இருக்க வேண்டினார்கள். உடனே இவரும் இசைந்தார். கம்பராமாயணத்தில், போர் தொடங்குவதற்கு முன் ராவணனிடத்துத் தூது ஒன்று அனுப்ப வேண்டுமென்று ராமன் கூறுகி ற | ன். அது மனை அனுப்பலாம் என்கிறார்கள். திரும்பவும் அதுமனையே அனுப்பினால் அவனைத் தவிர ராவணனிடம் சென்று மீளக் கூடிய வீரர். நம்மிடம் வேறு யாருமில்லை என்று எதிரிகள் நினைத்து விடக் கூடும் என்ற காரணத்தினால், ராமன் அங்கதனை அனுப்புகிறான். ... ‘ - - o *மாருதி அல்லன் ஆகின், நீ எனும் மாற்றம் பெற்றேன், யார். இனி என்னோடு ஒப்பார்?’ என்பதாக அங்கதன் இன்பமுற்றான் எனக் கம்பன் பாடியிருக்கிறார். அன்று இவர் பட்டி மண்டப நடுவரிடத்தில் அமர்ந்து’ இந்தப் பாடலைச் சொல்லி, நீதிபதி இஸ்மாயீல் நடுவராக