பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - - 434.

இருக்க முடியாத நிலையில் தமக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது பெருமையளிப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை, பின்பு நினைவுபடுத்திய நீதிபதி மு. மு. இஸ்மாயீல் கி.வா.ஜ., தம் முன்னுரையில் சொன்னது அவருடைய பெருமையையும் பெருந் தன்மையையும் ஒளிவீசிக் காட்டும். இது ஒன்றிலிருந்தே அவருடைய பல பெருமைகளைத் தெரிந்துகொள்கிறோம். ஒன்று. அவருடைய எளிமை. இலக்கியப் பயிற்சியிலும், நினைவாற்றலிலும் நான் எங்கே? அவர் எங்கே? எனினும் நான் இல்லாத இடத்தில் தாம் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும் அதற்கு இசைந்தார்: இரண்டாவது, நடப்பதோ கம்பன் விழா; அவர் கம்பனிலிருந்தே இந்தப் பாடலை எடுத்துக் காட்டியதாகும். இது அவரது இலக்கியப் பயிற்சியோடு, பேச்சுத் திறனையும், தக்க சமயத்தில் பொருத்தமானதை எடுத்துக் காட்டும் தனித் தன்மையையும் ஒருங்கே தெளிவாக்குகிறது’ G言G凉 எழுதினார்.* - . . . . . .

நீதிபதி மு. மு. இஸ் மா யீ ல் தம் மாணவப் பருவத்திலிருந்து சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவருடன் பழகியவர்; இவரிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். - , , * - - -

X。 X - × . மோகனூர் போய் ச் சேர்ந்த இரண்டொரு. நாட்களுக்குள் தாமே தன் நண்பர்கள் அனைவரையும் சென்று பார்த்து வந்தார். .

அப்புறம் எங்கும் போகவில்லை. தினமும் காவேரியில் நீராடுவது, காந்தமலையானைச் சென்று தரிசித்து வருவது, மற்ற நேரங்களில் தாம். எடுத்துச் சென்ற புத்தகங்களைப் படிப்பதும், சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு காவியம் பற்றிய கட்டுரைகளை எழுதுவது மாகவே மோகனுசரில் இருந்தபடி பொழுதைக் கழித்தார்,

  • கலைமகள்: நவம்பர் 1988: . .