பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 - நாம் அறிந்த கி.வா.ஜ.

ஆராய்ச்சி நூல் முற்றுப்பெறுதல் :

சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்த இவரது வேலையைக் கவனிக்கும் பொறுப்பு ரீமத் ஐயருக்கு இருந்தது. அண்ணாவுக்கும் இவர் இல்லாதலால் கரூஃப்” பொறுப்புகளை முற்றும் ஏற்றுக் கவனிக்க இயல வில்லை. அவரும் முதியவர்தாமே? மோகனூர் போய் இவரைத் தம்முடன் அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சமயம் நாகப்பட்டினம் போக வேண்டியிருந்ததால் போய்விட்டு அப்படியே திருச்சி சென்று மோகனூர் போய்வரத் திட்டமிட்டார். இவருக்கும் கடிதம் எழுதினார். திருச்சியில் தாம் இன்ன தேதி, இன்னார் வீட்டில் இருக்கக் கூடும் என்று எழுதினார்:

அண்ணாவின் கடிதம் பார்த்தவுடன் இவர் உடனே திருச்சிக்குச் சென்று அண்ணாவைப் பார்த்தார். பூரீமத் ஜயரது கவலையை உணர்ந்து இவர் அவருக்கும் உடனே கடிதம் எழுதினார். அப்போது ரீமத் ஐயர் இவருக்கு எழுதிய கடிதத்தில் காவியம் பற்றிய ஆராய்ச்சி நூலை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டிருந்தார்: அடுத்த ஒரு வாரத்திற்குள் தம் ஆராய் ச் சி க் கட்டுரைகளை எழுதி முடித்தவுடன், இவர் தன் மனைவி யையும், சகோதரியையும்மட்டும் அழைத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். -

இவர் எழுதிக் கொண்டுவந்திருந்த காவியம்பற்றிய கட்டுரைகளை முழுக்கப் படிக்கச் சொல்லிக் கேட்டு ரீமத் ஐயர் மகிழ்ந்தார்.

தமிழிலுள்ள காப்பிய இலக்கிய நூல்களை மட்டு மின்றி வடமொழி அலங்கார சாஸ்திரங்களிலும், ஆங்கில நூல்களிலுமுள்ள அருமையான விவரங்களை இவர் தம் நூலில் ஆங்காங்கு ஒப்பும்ைவாகக் காட்டியிருந்ததைச் சுட்டிக் காட்டி, பூரீமத் ஐயர் எழுதிய தம் முகவுரையில் “இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் ஜகந்தாதைய ட குடைய பலதிறப்பட்ட பேராற்றலும், நூ ல.ா ரா ப்ச் சி