பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கலைமகள் மைந்தன் 426

வன்மையும், வடமொழி, தமிழ் இலக்கண-இலக்கிய நூல்களில் இவருக்குள்ள பரத்த ஞானமும் ஞாபக சக்தியும் நன்கு புலனாகும்’ எனக் குறிப்பிட்டார்.

இவர் பி.ஓ.எல்., தேர்விலும் நன்கு தேறினார். பின்னால் சென்னைப் ப ல் க ைல க் க ழ க த் தி னர் இதுபோல் பி.ஓ.எல்., தேர்வில் தேறியவர்களுக்கு, பி.ஓ.எல்., (ஆனர்ஸ்) என்பதாக எம்.ஏ., பட்டத்தையும் வழங்கினார்கள், - ‘.

விரைவிலேயே இவரது காவியம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை நூல் சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்தது. திருப்பனந்தாள் சுவாமிகளின் அவா .

திருப்பனந்தாள் காசிமடத் தலைவராக 19-ஆம் பட்டத்தில் நிரம்பிய புலமை உடைய பூரி காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் இருந்தார். குமரகுரு :பரருடைய பிரபந்தத் திரட்டை முன்பே அவள் அச்சிட்டிருந்தார். . “...” முன்பு தாம் பிறந்த குலத்துப் பெரியாராகிய சிவக் கொழுந்து தேசிகரின் பிரபந்தங்களை பூரீமத் ஐயரைக் கொண்டு குறிப்புரையுடன் பதிப்பித்து உதவிய அவருக்கு மற்றுமோர் ஆசை எழுந்தது. - - - தாம் புகுந்த இடத்துப் பெரியாராகிய ரீகுமரகுருபர சுவாமிகளுடைய பிரபந்தங்களையும் பூரீமத் ஐயரைக் கொண்டே குறிப்புரைகளுடன் பதிப்பித்து வெளியிட நினைத்தார்: ரீமத் ஐயரிட மும் விண்ணப்பித்துக் கொண்டார்: - - .

X X。 - x ஐந்து வயதுவரை பேசாமல் இருந்து பின்பு செந்திலாண்டவன் அருளால் கவித்துவம் பெற்றவர் குமர குருபரசுவாமிகள். ரீமத் ஜ யருக்கு இன்மைமுதலே