பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 நாம் அறிந்த கி.வா.ஜ.

இவருக்கு ஒரு மகளும் மூன்று புதல்வர்களும் உண்டு. இவருடைய மகள் சொ. உமாமகேசுவரிக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. கந்தர் க. வி ெவ ண் பா “ விரிவுரையைப் பூர்த்தி செய்த கையுடன் இவர் உமாவின் திருமணத்தை 7-5-69 - இன் மயிலைக் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடத்தினார். -

பூரீமத் ஐயர் இதற்குமுன் இவரிடம் பூர் குமரகுருபர ருடைய பிரபந்தம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டு மென்று சொன்னபோது இவரது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அதே சமயம் திருப்பனந்தான் காசி மடத்துத் தலைவருக்கும் பூரீமத் ஐயரின் வாயிலாக முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும், சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங் களும் வெளியிடும் அவா இருந்தது. அப்பணியைச் செய்ய இசைந்த ஐயரவர்களுடன் இவரும் இருந்து ஏட்டுச் சுவடி காண்பதும் அவர் சொல்வதை மனத்தில் வாங்கிக் கொண்டு அவரது நடையிலேயே எழுதுவதும், அவரிடமே படித்துக் காட்டுவம் உண்டு. பின்பு கலைமகளிலும் வெளியிடத் தொடங்கினார், . .

அநேகமாக இந்தப் பதிப்புப் பணி முற்றுப்பெறும் நிலையில் இருந்தபோது 1939-இல் திருப்பனந்தாளில் பூரீ குமரகுருபரருடைய குருபூஜை விழா வந்தது. பூரீமத் ஐயரும் அதற்குப் போனார். அவருடன் இவரும், அன்பர் வி.மு.க.வும் சென்றனர். . -

குளத்தங்கரையில் வழக்கம்போல் ஒரு தனி வீட்டை ஏற்பாடு செய்து, அந்த வி ட் டி ன் வாசலில் பந்தல் போட்டு, வாழை, கமுகு முதலியவற்றையும் திரைச்சீலை களையும் கட்டச் செய்திருந்தார் தம்பிரான் சுவாமிகள்.

விழாவுக்கு வந்திருந்த அத்தனை புலவர்களும், பிரபுக்களும் ரீமத் ஐயரை வந்து பார்த்துப் பேசி மகிழ்ந்தார்கள். தம்பிரானும் இவர்களுக்கு எந்தவிதக் குறையும் இராமல் பார்த்துக்கொண்டார்.