பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 44%

குருபூஜைக்கு மறு நாள், மாலை நேரம், கையெழுத்து மறையும் தருணம், ரீமத் ஐயர் தம் ஜாகையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தார் . இவரும் அன்பர் வி.மு.க.வும் உடன் இருந்தனர்.

அப்போது அரசுப்பிள்ளை என்பவர் அந்த ஜாகையின் பின்பக்கத்திலிருந்து வந்தார். திருநாவுக்கரசுப் பிள்ளை என்பது அவருடைய முழுப் பெயர். தம்பிரானுக்கு மிகவும் வேண்டியவர். ரீமத் ஐயரிடம் பக்தி உடையவர். அவர்கள் வருகிறார்கள்’ என்று அரசப் பிள்ளை அரைகுறையாகச் சொன்னது இவர் காதில் விழுந்தது, இவருடன் மற்றும் பலர் எழுந்துகொண்டார்கள். அதற்குள் அரசுப் பிள்ளையோடு வந்தவர் ரீமத் ஐயருக்கு அருகி லுள்ள முக்காலியில் உட்கார்ந்துகொண்டார். -

பூர்மத் ஐயர், யார்?’ என்று கேட்டுக்கொண்டே .திரும்பிப் பார்த்தார்.

எசமான் சுவாமிகள் வந்திருக்கிறார்’ என்று அன்பர் கி.வா.ஜ., அவர்காதருகில் சொன்னார். அந்த மடத்து. அதிபர்களை எசமான் சுவாமிகள் என்று வழங்குவது மரபு. 3. பூரிமத் ஐயருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் அப்படியெல்லாம் வருவது வழக்கம் இல்லை. அவர் இருக்குமிடத்தில் மற்றவர்கள் போய்ப் பார்ப்பார்கள். என்ன இது? சொல்லி அனுப்பினால் நான் வந்திருக்க மாட்டேனா?’ எனச் சொல்லிக்கொண்டு. ரீமத் ஐயர் மெல்ல எழுந்திருக்க முயன்றார். தம்பிரான் சுவாமிகளின் பரிவு : х

தாங்கள் அப்படியே வசதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்’ என்று சுவாமிகள் கூறிய போதிலும் சாய்வுநாற். காலியில் இருந்த ரீமத்ஐயர் காலை மடக்கிக்கொண்டார். சுவாமிகளோ, நான் தகாத காரியம் ஒன்றும் செய்து விடவில்லையே! சொல்லாமல் வரவேண்டுமென்றுதான் வந்தேன்” என்று சொல்லி அரசுப் பிள்ளையை நோக்கி,

ானங்கே எடும்?’ என்றார்.