பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 நாம் அறிந்த கி.வா.ஜ. அரசுப் பிள்ளை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கை வைத்து நீட்டினார். பின்பு பத்து நூறு ரூபாய் நோட்டுக்களையும் நீட்டினார். அவற்றைத் தட்டிலே வைத்துத் தம்பிரான் பூரீமத் ஐயருக்கு அளித்தார். பூரீமத் ஐயரோ, என்ன இது?’ என தாத் தடுமாறக் கேட்டார். *- -

லட்சக்கணக்கின் கொடுக்கும் பாக்கியம் எனக்கு இல்லை. தங்கள் திருக்கரத்தால் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தமும், குமரகுருபர சுவாமிகள் பிரபந்தமும் வெளி வரும்படியான பாக்கியம் கிடைத்தது. அதற்கு நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய அன்பைக் காட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என மன மூருகச் சுவாமிகள் பேசினார். - - - “மடத்துக்கே அழைத்து இதை வழங்கியிருக்கலாமே? என் இடத்துக்கு அழைத்து ஏதோ கூலி கொடுப்பது போல அளிக்க எனக்கு மனம் வரவில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் நீங்கள் செய்த உபகாரத்துக் காக என் சிறு காணிக்கையைச் சமர்ப்பிக்கவே வந்தேன்” என்று தம்பிரான் சொன்னபோது அவருடைய நாக்குப் பேசவில்லை; இதயமே பேசியது. எனினும், தம்பிரான் வந்தபோது தாம் உட்கார்ந்திருந்தது பூரீமத் ஐயருக்கு மனவுறுத்தலாகவே இருந்தது. -

“அன்பர் ஜகந்நாதையரின் பேருழைப்பே இப்பதிப்பி லுள்ள ஆராய்ச்சியும், குறிப்புரையும் இம்முறையில் அமைந்திருப்பதற்கான காரணமென்பதை இதன்முகமாகத் தமிழன்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என பூரீமத் ஐயர் தம் முகவுரையில் குறிப்பிட்டிருந்தார்: தம்பிரான் கி.வா.ஜ-வுக்கு அளித்த கன்கொடை :

சாமிநாதத் தம்பிரான், இந்நூல் வெளியான சில. நாட்களுக்குள் ஏதோ ஒரு காரியமாக இவரைத் திருப்பனந் தாளுக்கு ஒருமுறை அனுப்பி வைக்கும்படி பூரீமத் ஐயருக்கு எழுதவே, ஆசானும் இவரைத் திருப்பனந்தாள் சென்று: ரா-28 -