பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 442

வரப் பணித்தார். இவர் திருப்பனந்தாள் சென்ற போது, சாமிநாதத் தம்பிரான் ஆயிரம் ரூபாய் இவருக்கும் வழங்கி, குமரகுருபரர் பிரபந்தத்தைப் பதிப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட பேருழைப்பை ரீமத் ஐயரவர்களே சொன்னார்கள். அன்றே உங்களுக்கும் சம்மானம் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். வேறு சிலரும் உங்களுடன் இருந்தார்கள். அதனால்தான் உம்மை இப்போது தனி யாக வருவித்தேன். இந்த விஷயம் நம்மோடு இருக்கட்டும், யாருக்கும் தெரிய வேண்டாம்! உம் நன்மையை உத் தேசித்தே சொல்கிறேன்: ஐயரவர்களிடங்கடச் சொல்ல வேண்டாம்’ என்றார்கள்.

அதைக் கேட்டு இவர் திடுக்குற்றார். என்னை ஆட் கொண்ட தெய்வமாகிய அவர்களிடங்கூடத் தெரிவிக் காமல் நான் எப்படி இருப்பது?’ என்று இவர் வாய் குழறினார். “ . . . . ; .

நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உண்டு: உமக்குக் கிடைக்கும் தன்மையினால் ஐயரவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும் என்பது எனக்கும் தெரியும். அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்தால் உடன்ே அவர் இதைத் தம் குமாரரிடம் சொல்லக் கூடும். அவரும் பெருமகிழ்வுற்று மற்றவர்களுக்குத் தெரிவிப்பார். இதனால் உங்கள்மேல் சிலருக்குப் பொறாமை உண்டாக் லாம். மற்றவர்கள் நம்மைக் கண்டு பொறாமைப்பட இடம் அளிக்காமல் அ டக் க மா. க வு ம் வாழவேண்டுமல்லவர்? அதனால்தான் அப்படிச் சொன்னேன் என்று கூறினார்.

அதன் பிறகு இவர் எதுவும் கூறவில்லை. ஆசானின் ஆசி :

சென்னை வந்ததும் இதை ரீமத் ஐயரிடம் கூறாமல் இருக்க இவரால் முடியவில்லை, அந்த ஆயிரத்தையும் அவரது. திருவடியில் வைத்துவிட்டுத் திருப்பனந்தாளில் ஆந்தைதச். சொன்னார். -