பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总4昂 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

ரீமத் ஐயருக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. அந்தப் பணத்தை எடுத்து இவரது கையிலேயே கொடுத் தார். என்னிடம் சொன்னதோடு இருக்கட்டும். சாமி நாதத் தம்பிரான் மிகுந்த அநுபவசாலி. அவர் சொன்ன படியே நடந்துகொள்ள வேண்டும். அதனால் தன்மையே உண்டாகும். பல வருடங்கள் கழித்து இப்போதுதான் உமக்கும் பிள்ளை பிறந்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது ஆபரணம் செய்துபோட இதைப் பயன்படுத்த வேண்டும்’ எனச் சொல்வி ஆசீர்வதித்து அனுப்பினார்.

இவருடைய மூத்த புதல்வர்26-8-89-இல் பிறந்ததும் இவர் தம்முடைய ஆசிரியப்பிரானின் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டியிருந்தார். ‘.

அந்தக் காலத்தில் வ. த. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மாவட்ட முன்சீஃபாக இருந்தார். முருகனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். х x - தாம் திருப்புகழைப் பதிப்பித்தபோது ப்ரூஃபை ரீமத் ஐயருக்கே அனுப்பி வைப்பார். ரீமத் ஐயரும் திருத்தி அனுப்புவார். .

“அந்தத் திருப்புகழ்க் கைங்கர்ய பலன்தான் முருகன் உம்மை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறான்” என்று அருணகிரிநாதருடைய வாக்கிலே அதிக ஈடுபாடு கொண் டிருந்த இவரிடம் பூரீமத் ஐயர் சொல்வாராம்.

தந்தை திருப்புகழ்ப் பாடல்களைமட்டும் தொகுத்து வெளியிட்டார் என்றால், அவருடைய குமாரராகிய வ.சு. செங்கல்வராய பிள்ளை திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரையெழுதி அவற்றை உரையோடு பிற்காலத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். நம் அன்பர் கி.வா.ஜ. அதற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியிருக்கிறார். х

செங்கல்வராய பிள்ளைக்குத் தம் சிறு வயதுமுதலே ஆரீ ம த் ஐ ய ரி - த் தி ல் ஒரு ம தி ப் பு உ ண் டு. ஒரு முறை பூரீமத் ஐயருக்கு, “ஜான்சனின் சரிதத்தை அவருடன் பழகி எழுதிய பாஸ்வல் போல, நான் தங்கள்.