பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 நாம் அறிந்த சி.வாசு:

ஆனந்த விகடன் சார்பில் கல்கியவர்கள் துரீமத் ஜயரது சதாபிஷேகம் நடத்த ஆண்டிலிருந்தே

இதுபற்றி எழுதியும், சொல்லியும் வந்தார்.

பூரீமத் ஐயரது வாழ்க்கை வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறாக - தமிழ் மக்களின் பண்பாட்டுக் களஞ்சியமாக அமையும் என்பது இவருக்கும் தெரியும்; அதனை எழுத பூரிமத் ஐயரை இணங்க வைக்கவும் இவரால் முடியும். எனினும், மற்றப் பதிப்புப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என அண்ணா எண்ணிவிட்டால் என்ன ஆவது என இவர் அஞ்சினார். எனவே, தம் ஆவலை வெளிக் காட்டாமல் இருந்து வந்தார். * ‘ 、"、”

ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த கல்கி” இவர்ை விடுவதாக இல்லை. அடிக்கடி நினைவுபடுத்தி வத்தார். ஒரு நாள் இவர் மெல்ல, பேச்சுவாக்கில், தமிழகம் உங்கள் வர்லாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இளந் தலைமுறையினருக்குப் பயன்படக் கூடிய இலக்கியமாக அது இருக்கும். தாங்கள் ஏற்கனவே பலபல சந்தர்ப்பங்களில் சொன்னவற்றையெல்லாம் தான் குறித்து வந்திருக்கிறேன். தாங்கள் அங்கங்கே தொடர்பு படுத்திப் பழைய நிகழ்ச்சிகளைச் சொன்னால் போதும், நானே எழுதுகிறேன்’ என்றார், பூர்மத் ஐயரிடம் இவரை திமிர்ந்து பார்த்துச் சிரித்துக்கொண்டார் அவர். ஆட்சேபம் எதையும் சொல்லவில்லை. , . . .

அடுத்த நாளே இவர் கல்கி'யிடம் போய், ஐயரவர் களைத் தாங்கள் நேரில் ஒரு முறை வந்து பார்த்து இது குறித்துப் பேச்வது நலம்’ எனத் தெரிவித்து வந்தார்.

1939-ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த நிகழ்ச்சி இது: ரீமத் ஐயரைப் பார்க்கக் கல்கி” யும்தியாகராஜ விலாசம்’ வந்தார். அப்போது அண்ணாவும், இவரும் அங்கே இருந்தனர். கல்கி தம் கோரிக்கையை மீண்டும். வற்புறுத்தி வேண்டியதோடு, புது வருஷம் முதல்