பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் ‘446

வாரத்திலிருந்து என் சரித்திர'க் தொடரை ஆரம்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ஐயரவர்களிடம் இவர் தெரிவித்தபோது, கல்கி” அவர்களுக்கு தம்மிடம் இருந்த ஆழ்ந்த பக்தி சிரத்தை காரணமாக அதனை ஆசானால் மறுக்க முடியவில்லை; அவர் இணங்கினார். -

பூரீமத் ஐயரைக் கேட்டுக்கொண்டு இவர் அவரது சுயசரிதம் முதல் அத்தியாயத்தை எழுதி அண்ணாவிடம் கொடுத்தார். அண்ணாவுக்கும் அதைப் படித்துப் பார்த்ததும் மனநிறைவு உண்டாயிற்று. “நீயும் வா. இதை நாமே கொண்டுபோய்க் கல்கி'யிடம் கொடுத்து வருவோம்’ என் இவரையும் அழைத்துக்கொண்டு கல்கி” பிடம் போய் 15-12-89-இல் முதல் கட்டுரையைக் கொடுத்து வந்தார். . - ..

1940 ஜனவரிமூதல் பூரீமத் ஜயரது வாழ்க்கை வரலாறு என் சரித்திரம்’ என்ற தலைப்பில் ஆ.வி.இல் வெளிவரத் தொடங்கியது. - கவலை தந்த உடல்கிலையில் ஆசான்:

ரீமத் ஐயருக்குச் சிறுநீர் துவாரத்தில் ஏதோ ஒரு சிறு புண் சில மாதங்களாகவே இருந்திருக்கிறது போலும்; தம், உடம்பைப்பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே யில்லை. முத்ல் நாள் இரவு ஜாரம் வந்திருக்கிறது ஐயரவர்களுக்கு; அதனால்தான். அண்ணாவுக்கே இது தெரிந்தது. - இவர்கள் போய் டாக்டர் திரிமூர்த்தியை அழைத்து வந்தார்கள். அவர் வந்து பார்த்தார். அது கான்சர் நேரய் எனத் தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சைதான் நல்லது. இல்லையென்றால் அது படர்ந்து அவரது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம் என்று சொன்னார் டாக்டர். - . . . . . . . . .

எல்லோருக்கும் கவலை உண்டாயிற்று. இந்த வயதில் அறுவைச் சிகிச்சை. எல்லாம் வேண்டாம். மருந்து களின்மூலமே குணப்படுத்த முயற்சி செய்வோம்’ என்று அண்ணா சொன்னார். - - .