பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347 - நாம் அறிந்த் கி.வா.ஜ.

டாக்டர் கொடுத்து வந்த மருத்துகளுக்கெல்லாம் அது குணமாகவில்லை. தொல்லைகள் அதிகரித்தன; ஆகாரம் உட்செல்லவில்லை.

, எனவே, திரும்பவும் 1940-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி மாலையில் ரீமத் ஜயரை டாக்டர் வந்து பார்த்தார். - . . . . +. “ . -

இவ்வளவு தூரம் வளரவிடாமல் முன்பே கவனித் திருக்கலாம். இனி உடனே அறுவைச் சிகிச்சை செய்யத் தான் வேண்டும்” என்றார். . .

அண்ணா சிறிது யோசித்தார். இதைத் தாங்கிக் கொள்ள அவருக்குப் பலம் இருக்கிறது. இருதயம், நாடி எல்லாம் நன்றாக உள்ளன. ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று டாக்டர் சொன்னார்: . . . .

டாக்டர் கொடுத்த தைரியத்தில் பூர்மத் ஐயரை ராயபுரம் அரசு மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். . . ‘, 1940 ஜனவரி 30.ஆம் தேதி ரீமத்ஐயருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதை டாக்டர் கனகசேபசன் என்பவர் செய்தார். அன்றிலிருந்து அன்பர் கி.வா.ஜ. அலுவலகம் போகவில்லை. பகலும் இரவும் மருத்துவ மனையில் தம் ஆசிரியரின் அருகிலேயே இருந்தார். . . . .

அலுவலகம் போக ஆரம்பித்தவுடன் இரவு நேரங்களில் மருத்துவ மனைக்குப் போய் டிரீமத் ஐயருக்குத் துணையாகத் தங்கி வந்தார். * - . . . .

இந்த நேரந்தான் மோகனூரிலிருந்து இவருடைய தந்தையாருக்கும் உடம்பு சரியில்லை எனக் கடிதம் வந்தது. ரீமத் ஐயர் மனம் தளரவில்லை. மருத்துவ மனையில் இருக்கும்போது அவரை விட்டு மோகனூர் போக இவருக்கு மனம் வரவில்லை. . . . . . . . . . . .

தம் சகோதரி மதுகரத்தைமட்டும் மோகனூர் அனுப்பி வைத்தார் கி.வா.ஜ. i.