பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 - நாம் அறிந்த .ெவா.க.

  • ஏற்கனவே பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருந் தாலும் நான்முறையாகத் தமிழ்பயின்றது கி.வா.ஜ.விடமே. எனக்கு இவர் தமிழ் கற்றுத் தருவதைக் கலைமகள்: அதிபர் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பார்’ என்று சொல்வார் திரு. சேனாபதி. எவர்க்கும் பாடங் கூறும் பண்பின் காரணம் :

இளமையில் பூரீமத் ஜயர் அரியலூரில் இருந்தபோது அவ்வூருக்கு ஒரு கவிராயர் வந்திருக்கிறார். அவர் *திருவரங்கத்தந்தாதி யிலிருந்து ஒரு பாடலைச் சொல்லிப் பொருளும் கூறினார். அதைக் கேட்ட்வுடன் அந்தால் முழுவதையும் அவரிடமே பாடம் கேட்கவேண்டுமென்ற ஆசை ரீமத் ஜயருக்கு எழுந்தது. உடனே தலைதெறிக்கத் தம் விட்டிற்கு ஒடிச் சென்று அந்நூலை எடுத்து வந்தார். அவரது ஆர்வத்தைக் கவிராயரும் தெரிந்துகொண்டார். ; :

திருவர்ங்கத்தந்தாதி எளி தி ல் எல்லோருக்கும் . . விளங்காது. நான் எவ்வளவு சிரமப்பட்டு இந்நூலின் :பாடல்களுக்குப்பொருள் தெரிந்துகொண்டேன் தெரியுமா? ஒவ்வொரு பாட்டும் ஒரு புதையலுக்குச் சமானம்’ எனக் கவிராயர் சொல்லி வந்தபோது பாடம் சொல்லத் துவங்கு முன் நூலின் சிறப்பியல்புகளை அவர் சொல்வதாக பூரீமத் ஐயர் நினைத்திருக்கிறார். ஆனால், அந்தக் கவிராயரோ, “நான் கஷ்டப்பட்டுத் தேடிய புதையலை அவ்வளவு எளிதில் வாரிவிசுவேனா? எனச் சொல்லிப் போய் விட்டாராம்! இந்தச் செய்தியை பூரீமத் ஐயரிடமிருந்து இவர் அறிந்திருந்தார். இப்படித் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குச் சொல்லித் தராமல் அதைக் காக்கும் பூதமாக இருந்து என்ன பயன்’ என்று இவர் சொல்வது உண்டு.

தமக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் என் போன்றோர்க்குப் பாடம் சொல்வதில் ஆர்வம் உடையவர் கி.வா.ஜ. பத்திரிகைத் துறை அன்பர்களும் வேறு பலரும் எத்தச் சந்தேகம்குறித்து எப்போது தொலைபேசிமூலம் விளக்கம் கேட்டாலுங்கூட அவர்களுக்கு உடனே விளக்கம்