பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 நாம் அறிந்த கி.வா.ஜ:

அகாதமி, மற்றும் பிற நிறுவனங்கள் தோன்றி இப்பணியில் ஈடுபடுவதற்கு முன்பிருந்தே இலக்கிய இரட்டையர் களான இவர்கள் வங்காளி இலக்கியங்களைக் ‘கலைமகள்”, ஆனந்த விகடன், கல்கி வாயிலாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள். . . .

அதோடு தமிழி லு ள் ள ஆ ழ் வார், நாயன்மார் வரலாற்றையும் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற வற்றையும் வங்கமொழியாக்கம் செய்து வருகிறார் அன்பர் சேனாபதி. - -

. ... X . . . . . X, X தமிழ்த் தாத்தாவும் மகாகவி ரவீந்திரரும்: -

“ஒரு மொழியினர் பிற மொழிகளைக் கற்பதனால் தங்கள் தங்கள் மொழிகளின்மீது அவர்களுக்குள்ள பற்றுதல் அதிகப்படுகிறதே தவிரக் குறைவதில்லை. ஒரு. மொழி வேறு ஒரு மொழியின் தொடர்பினால் விரியினும் அதனால் அம்மொழியின் அழகு குன்றுவதில்லை என்கிற துட்பமான கருத்தை பூரீமத் ஐயர் பல முறை.

வெளியிட்டிருக்கிறார். - - - -

பூரீமத் ஐயரும், ரவீந்திரநாதரும் கிட்டத்தட்டச் சமகாலத்தவர்கள். ரவீந்திரர் சென்னைக்கு வந்திருச் கிறார். தமிழகத்துப் பழம்பெரும் புலவர்களின் பாடல்களை உயிர்ப்பித்து வந்த பூர்மத் ஐயரும், வங்காளியில் அரிய கவிதைகளைப் படைத்தளித்து வந்த ரவீந்திரரும் ஒருவர்ை யொருவர் சந்தித்து அளவளாவியிருக்கிறார்கள். ரவீந்திரர் தியாகராஜ விலாசம் வந்து, ரீமத் ஐயர் சேகரித்து வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டு

வியந்திருக்கிறார். - - ‘.

பாராட்டுக்குரிய பெரியோரே, அகத்திய முனிவரைப் போன்றோரே! தமிழ் நாட்டின் பழம்பெரும் இலக்கியச் செல்வங்கள், காலங் காலமாக இருளில் எங்கோ பனையோலைகளில் ஒளிந்து கிடக்க, நிலவில் மலர்ந்த