பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 45芯

.திருந்தார்கள். ஒரு சிறிய விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு கிழவரின் கழுத்தில் இருந்த குத்திராட்சம், உடம்பிலும் நெற்றியிலும் இருந்த விபூதி, கயிற்றினால் கட்டிக் கண் ணி ல் போட் டி ரு ந் த வெள்ளெழுத்துக் கண்ணாடி யாவும் தெரிந்தன.

ஹோலாஸ்ய மகாத்ம்ய'த்திலுள்ள :பழி யஞ் சின படலத்தைப்பற்றி அந்தப் பெளராணிகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ மதுராபுரியின் எல்லைக்கு வெளியேயுள்ள இடத்தில் நடக்கும் திருமணத்திற்கு வா என அசரீரி எழுந்தது’ என்று சொன்னவர், அந்த அசரீரி மதுராபுரியின் எல்லைக்குள்ளே என்று ஏன் சொல்ல வில்லை?” எனக் கேட்டு நிறுத்தினாராம். - . - கேட்பவர்கள் மனசுக்குச் சிறிது வேலை கொடுத்து, பின்னர் அதனைத் தாமே விளக்குவது சொற். பொழிவாளர்கள் கையாளுகிற உத்தி அல்லவா?

தியாகராச செட்டியாரும் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டார். -

அதற்குள், கருணையே சொரூபமான சோமசுந்தர மூர்த்தியும், மீனாட்சியம்மையும் ஆட்சி புரியும் தெய்வத் தலம் மதுராபுரி. அது பூலோக சிவலோகம் எனப் பெயர் பெற்றது. அதன் எல்லைக்குள் அச்செயல் தடைபெறலாமா?’ என அந்த முதியவரே சொன்ன போது, “என்ன அருமை! என்ன ரசம்! ஆஹா’ என்று செட்டியார் உள்ளம் நெகிழ்ந்து.போனார். அந்தப் பெளராணிகருக்கும் தம்மால் இயன்ற உ த.வி.க ளைத் தியாகராச செட்டியார் செய்தார்.

இதுபோன்று ரீமத் ஐயருக்குத் தியாகராச செட்டியார் நினைவு வரும்போதெல்லாம், தளர்ந்த தம் முதிய வயதிலும் முத்துமுத்தாகக் கண்ணிர் சிந்துவார்.

என் சரித்திரம் முடிந்தாலும் சரி, முடியா விட்டாலும் சகி, அந்த மகோபகாரி. தியாகராசன்