பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கலைமகள் மைந்தன் 45.8

சரித்திரத்தைக் கலைமக'ளில் மா த த் தோறும் வெளிவரும்படி செய்தார். உலகப் போரினால் கேர்ந்த இடமாற்றம் :

இரண்டாவது உலக மகாயுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. சிங்கப்பூர், பர்மாவரை யுத்தம் வந்துவிட்டதால், சென்னை நகரமும், குண்டினால் தாக்கப்படும் அபாயம் அதிகரித்து வந்தது. . . “ சென்னையில் இருந்த பெரும்பாலான குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களைத் தேடிக் குடியேறினார்கள். சென்னையைவிட்டுப் போக முடியாதவர்கள் தங்கள் குடும்பத்தை வெளியூர்களுக்கு அனுப்பிவிட்டுத் தாங்கன் மட்டும் இங்கே தங்கினார்கள். - -

ரீமத் ஐயர் ஒரு நாள் தம் வீட்டில் விடியற்காலம் படுக்கையிலிருந்து எழுந்தபோது கீழே விழுந்துவிட்டார். வலப்பக்கம் நல்ல அடி. எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு முறிவு இருப்பது தெரிந்தது. அதனால் படுத்த படுக்கையிலிருந்து அவர் நகரக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். .*. - . . . . ‘

இந்தச் சமயத்தில் புத்தபயமும் சேர்ந்துகொண்டதால் பூரீமத் ஐயரைத் திருக்கழுக்குன்றத்துக்கு எடுத்துச் செல்ல உத்தேசித்தார்கள். அங்கே திருவாவடுதுறை மடத்துக்குச் சொந்தமான ஒரு வீடு உள்ளது. அதில் பூரீமத் ஐயரைத் தங்க வைக்க ஏற்பாடாயிற்று. . . .

ஒரு நாள் அவரை அங்கே அழைத்துப் போகக் காரி வந்தது. கிளம்புவதற்கு முன் ரீமத் ஐயர் தம் வீட்டில் தாம் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களையெல்லாம். ஒரு முறை கண்ணோட்டமாகப் பார்த்தார். - -

தம்மைச் சுற்றியிருந்தவர்களின் வருத்தந் தோய்ந்த முகங்களையெல்லாம் ஆறுதலாக நோக்கினார். சிறிது நேரம் தம் கண்ணை முடிக்கொண்டு தம் குலதெய்வமும் உபாசனா மூர்த்தியுமான மீனாட்சிசுந்தரரைத்

திiர்னிேத்தார். - - r