பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 நாம் அறிந்த கி.வா.ஜ.

எனக் காளமேகப் புலவர் வைத்தீசுவரரை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடியுள்ள பாட்டைச் சொல்வி விளக்கினார். -

(வாதக் கால்-வாதநோயை உ ைடய கால்: காளியோடு வாதம் செய்த கால். நீரிழிவு - நீரிழிவு வியாதி; பாற்கடலில் இருப்பவர். பெ ரு வ யி றுமகோதரம்; இது ஒரு வியாதி, பெரிய வயிறு. வேளுரார்வைத்தீசுவரன் கோவிலில் உள்ள சிவபெருமான்)

ஒரு வைணவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்: அவருக்கு மி க வு ம் சந்தோஷம் ஏற்பட்டது. ‘நல்ல வேளை, எங்கள் சுவாமியைப்பற்றி இதுபோல யாரும் பாடவில்லை’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார். -

‘ஏன் பாட்வில்லை?’ என்றார் இவர். அவரோ, ‘யார் பாடியிருக்கிறார்? இருந்தால் எங்கே ஒரு பாட்டுச் சொல்லுங்கள்’’ எனச் சவால் விட்டார். ‘இந்தப் பாட்டைக் கேளுங்கள்’ என்று இவர் தொடங்கினார்:

நீரிழிவு தானுள்ளான் நீண்டகழ லுடையான் சீரிலகு மார்பிடைச் சீக்கொண்டான்- போரின் வலிப்புமிக் குள்ளே புகுந்தமா லானான் பிறவிநோய் தீர்ப்பான் தெரிந்து

(நீரிழிவு-ஒருநோய். பாற்கடவில் சயனித்திருத்தல் நெடுங்கழல் - நீண்ட கால், உலகத்தை அளப்பதற்காக நீண்ட கால். சீக்கொண்டான்- சீழ் கொண்டான், பூர் ஆகியமகாலட்சுமியைக்கொண்டான்.வலிப்பு மிக்குள்ளே -வலிப்பு நோய், வன்மையுடைய பாம்பு, மாலா னான் மயக்கம் உடையவன் ஆனான், திருமாலானான்) -

இந்தப் பாடலைக் கேட்டவுடன், ‘ எங்கள் சுவாமி

பேரிலும் இவை போன்ற பாடல்கள் இருக்கின்றனவா? எனச் சொல்லி, அந்த வைணவர் மெளனமானார்.