பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை

பூரீமத் ஐயர் காலமானபோது அவரருகில் இருக்கக் கூடிய பாக்கியம் அவர்தம் பேத்தி வயிற்றுக் கொள்ளுப் பேரர் சங்கரனுக்குத்தான் கிடைத்த்து. ஐயருடைய குமாரரும் அப்போது தம் தந்தையின் அருகில் இருக்க வில்லை. *

புரீமத் ஐயரது மறைவுகுறித்த செய்தியைக் கேட்டுத் தமிழகமே துயரத்தில் ஆழ்ந்தது.

தினமணி ஆசிரியரிடமிருந்து, டாக்டர் ஐயரைப் பற்றி உடனே ஒரு கட்டுரை தேவை எனக் கலைமகள்’ அலுவலகத்துக்கு ஃபோ ன் வ ந் த து. இவர் தாம் மோகனூரில் இருந்தாரே இவருடைய மாணவரும் கலை மகள் உதவி ஆசிரியருமான சேனாபதி தான் சமீபத்தில் இவர் தம்மிடம் சொன்ன நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு ஐயரவர்களைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினார். . ; او به ... “ . ! . . * ...”

‘தினமணி'யில் வெளியான அந்தக் கட்டுரையை அன்பர் கி.வா.ஜ., படித்தவுடன், மோகனூரிலிருந்தே சேனாபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். “ஏற்கனவே என் தந்தையை இழந்த நிலையில், என் குருநாதரையும் இழந்து தவிக்கும் என்னால் ஏதும் எழுத முடியவில்லை. உங்கள் கட்டுரையைப் படித்ததும், உங்களை என் துணைவ ராகக் கொண்டதுபற்றிப் பெருமை கொள்கிறேன்” என்பதாக இவர் எழுதிய கடிதமே, மற்றவர்களின் பாராட்டுதல்களையும்விட மேலானதாகச் சேனாபதிக்குத் தோன்றியது. . ‘... . . . . . .

மோகனூரில் தந்தையாரின் காரியங்கள் முடிந்தவுடன் காந்தமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வித்தார். அடுத்த தினமே திருக்கழுக்குன்றம் வந்துவிட்டார்.

பூரீமத் ஐயர் இருந்தபோது அவரது குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்த இவர், அவரது மறைவுக்குப்பின்