பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - Ꮞ7Ꮐ

கொண்டே துரீமத் ஐயருடைய பாடல்களைத் தமிழ்ப்பா மஞ்சரி’ என தொகுத்ததை வெளியிடவும், பாதியில் நி ன் று போ ன பூரீமத் ஐயரது சுய சரிதை'யின் பிற்பகுதியை என் ஆசிரியப்பிரான்’ என்கிற தலைப்பில் இவரைவிட்டே பூர்த்தி செய்யச் சொல்லியும் இவரைப் பெருமைப்படுத்தியிருப்பது ரீமத் ஐயரின் ேப த ரி க. சுப்பிரமணியத்தின் சாதனையே யாகும்.

அன்பர் கி.வா.ஜ.வும் தம் இறுதி நாள் வரை டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குநராக இருந்து த மி , க் தொண்டாற்றியுள்ளார்.

அன்பர் கி.வா.ஜ. மறைவு :

விபவ வருஷம் ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி யன்று (4-11-1988) இவர் தம் வாழ்வை நிறைவு செய்து கைாண்டார். பலரது உள்ளத்தையும் அன்பால் சர்த்து, இன்பமூட்டி வந்த காந்தமலை ேஜாதி, ப ழ கிய ஐவரையுமே கைவிட்டு, மெய்விட்டு எல்லையற்ற பெருஞ் சோதியுள் கலந்தது. -

முருகனது திருவடியை இவர் அடைந்த செய்தி, ஆவானொலி, தொலைக்காட்சிகள்மூலம் அன்றே எங்கும் பரவியது. பலரும் துயரத்துள் ஆழ்ந்தனர். பத்திரிகைகள் இவரது மறைவைப்பற்றி வருந்தி எழுதின.

தமிழ் இலக்கியப் பேரறிஞர் ஒருவரைத் தமிழ்’ உலகம் இழந்துவிட்டது” என நம் குடியரசுத் தலைவரும் வேறு பல அறிஞர்களும் இரங்கல் செய்தி விடுத்தனர்.

சனத்தொழிலைச் செய்தாலும், ஏ. த வத் ைத ப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்கிற பாட்டின் உண்மைப் பொருளை இவரிடத்துத்தான் கண்டேன், ... . . . . . ; “.