பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

477 - நாம் அறிந்த கி.வா.ஜ.

இவர் உடம்புக்கு வந்த நோய் என்ன? ஒரு நாள் தம் இதயத்தில் கை வைத்துக்கொண்டு. உட்கார்ந்திருந்தார். - . . . . -

மார்பு வலிக்கிறதா? என்று மனைவியார் கேட்டார். . . . . -- - -

அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றார். இவர். பசும்மா. முடி மறைக்காதீர்கள்! டாக்டரிடம் போக லாம்’ என்றார் மனைவியார். இவர், வேண்டாம்” என்றாலும் இவரை அவர்கள் விடுவதாக இல்லை. இதய நோய் நிபுணரிடம் அழைத்துப் போனார்கள். - -

நல்ல ஒய்வு வேண்டும்’ எனச் சொல்லி டாக்டரும். சிகிச்சையைத் தொடங்கிக்கொண்டார். - - - இவரும் சொற்பொழிவாற்ற வெளியூர்களுக்குப் போவதை நிறுத்திக்கொண்டார். சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டார். பார்க்க வருகிறவர்களிடமும், முன்போல உரையாடுவதில்லை. - :

ஆனால் இவரோ தம் தலையில் வெம்மை வரும் போதெல்லாம் புற இருளைப் போக்குகின்ற செங்கதிரோன் போல மாக்களது மன இருளை நீக்கும் பெரிய புராணத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார். - . . . .

திருத்தொண்டர் புராணத்திலே தம் மனத்தை லயப் படுத்திக்கொண்டார் என்றுகூடச் சொல்லலாம்.

கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி விடும் வேண்டா விறலின்ர் களான நாயன்மார்களின் வரலாற்றைப் பகலிரவு அற்ற நிலையில் எழுதிக்கொண்டே இருந்தார்.

மோட்சம் என்றால் என்ன? அகப் பட் டு க் கோண்டவன் எந்த இடத்தில் அகப்பட்டுக் கொண் டானோ அதிலிருந்து விடுபடுவதுதானே! பிரச்னை