பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை » . « : 4rs

இல்லாத வாழ்வு துறவிகளுக்குமட்டும் இருக்கிறதா, என்ன? எந்த நிலையில் இருந்தாலும் எப்போது மனம் பக்குவம் அடைந்துவிடுகிறதோ-எ ல் வ ள வு துக்கம் வந்தாலும் துயரம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், அவமானம் வந்தாலும் அவற்றால் துயரமோ, கோபமோ கொள்ளாத ஆனந்தத்தில் சதா இருக்கும்படியான மனப்பக்குவம் எப்போது ஏற்பட்டு விடுகிறதோ-அப்போது கட்டுகள் விடுபட்டுப் போகின்றன. அதே நிலையில் இருந்தார் நம் அன்பர் கி.வா.ஜ. - -

வெள்ளரிப் பழத்துக்கு உர்வாருகம் என்று பெயர், த்ரயம்பக மந்திரத்தில் வெள்ளரிப் பழம் போல மோட்சம் தரவேண்டும் எ ன ச் சொல்லப்படுகிறது. ம ற் ற ப் பழங்களைப் போலல்லாமல் வெள்ளரிப்பழம் பழுத்து விட்டது என்றாலும், இருக்கிற இடத்தில்தான் இருக்கும்: காம்புதான் அதை விட்டுவிடுகிறது. என்றைக்குக் காம்பு அதை விட்டது என்றே சொல்ல முடியாது; அந்தக் கொடி, காய்ந்து நகரும்போதுதான் காம்பு அதை விட்டுவிட்டது எனத் தெரியும்’ என்பதாகக் காஞ்சிப் பெரியவர் ரீமத் சந்திரசேகரேந்திர சுவாமிகள் சொல்வார். .

அமரர் கி.வா.ஜ., பெற்ற அந்த மோட்ச நிலையேஸ்கந்த சாம்ராஜ்யம் என நாங்கள் நம்புகிறோம். இறுதிவரை குருபக்தியில் திளைத்த உத்தமர் :

1966-இல் காஞ்சிப் பெரியவர்.சென்னை வந்தார்கள். கல்யாண நகரைச் சேர்ந்த இவர், அந்தப் பெரியவருக்குக் கனகாபிஷேகம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டார். 4-3-66 அன்று பெரியவரையே நேரில் போய்த் தரிசித்துக்கொண்டு விண்ணப்பித்துக் கொண்டார். மற்ற அன்பர்களுடன் கன கா பி ஷேகம் செய்யலாமென்று உத்தரவாயிற்று. - . .

இவர்கள் தங்கம், பணம் எல்லாவற்றையும் கொண்டு போய் மாம்பலம் ஜுவல்லர் ராமநாதனிடம் காசுகள். பண்ணக் கொடுத்து வந்தார்கள். .

t