பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479 நாம் அறிந்த கி.வா.ஜ.

கனகாபிஷேகத்திற்கு முதல் நாள் மேலும் 50 காசுகள் தேவையென அறிந்தார்கள். இரவோடு இரவாக மாம்பலம் சென்று மேலும் 75 காசுகளுக்கான தங்கமும், பணமும் கொடுத்து, எப்படியாவது மறு நாள் காலைக்குள் காசுகளை அடித்துத் தரும்படி ராமநாதனின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக வேண்டிக்கொண்டார்கள். 9 . 3 - 66 அன்று க்ா ைல ஐ ந் த ரை ம ணி க் கெல்லாம் கா ஞ் சி ப் பெரிய வர் புற ப் பட்டு க் கல்யாண நகர் வந்தார்கள். புதுப்பெரியவர் முன்பே, வந்துவிட்டார். கல்யாண நகர் சங்கத்தில் ஆயிரக் கணக்கான பேர்கொண்ட கூட்டம். புதுப் பெரியவர் முதல்கால பூஜை செய்தார்.

பெரியவர் பத்தரை மணிக்கே பூஜையை ஆரம்பித்து. விட்டார் தாரா பாத்ர அபிஷேகம் செய்த பிறகு கனகாபிஷேகம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் போய். “ஆர்டர் கொடுத்த காசுகள் இன்னும் வந்து சேரவில்லை!

பிற்பகல் 1 மணிக்கு, இருந்த காசுகளைக் கொண்டு. புதுப் பெரியவர் பெரியவருக்குக் கனகாபிஷேம் செய்தார். பெரியவர் பிட்சை செய்த பிறகு பி ரசா த ம் த ர அழைத்தார்கள். அப்போது மணி மூன்று இருக்கும்.

அந்த நேரந்தான் மாம்பலம் ராமநாதன் 75 தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு வந்து .ெ கா டு த் தார். அவற்றைப் பெரியவரின் மூன்வைத்து, இப்போதுதான். வந்தது’ எ ன் று. இ வ. ர் சொன்னார்.

இவரை நிமிர்ந்து பார்த்த காஞ்சி முனிவர், புன்சிரிப். போடு, நீ அபிஷேகம் செய்துவிடு. ஏகாந்த அபிஷேகமாக. இருக்கட்டும்’ என்று சொன்னார். -

பக்தி உள்த்தே பொங்கிட விம்மியபடி அந்தக் காசு.

களை. இவர் தம் திருக்கரத்தால் காஞ்சிப் பெரியவருக்கு, அபிஷேகம் செய்தார். ஆனந்தம் தாங்க முடியவில்லை.