பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 - நாம் அறிந்த கி.வா.ஜ.

கடைசியில் அவர் அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், வேறு யாரிடமோ கொடுத்துவிட்டார். இவரிடம் கொடுக்கவில்லை. -

கேட்டதற்கு, ‘மெட்ரிக்குலேஷன்கூடப் பாஸ் பண்ணவில்லை. உன்னால் எல்லாம் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் கொடுத்து விட்டேன்’ என அவர் சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டார்.

இப்படி இவரை அழவிடுவதற்கு அவர் ஆசை காட்டி இருக்க வேண்டாம். இவரது நெஞ்சில் ஆறிவரும் புண்ணைக் கிளறிவிட்டாற்போல அவருடைய வார்த் தைகள் இவருக்கு எரிச்சலூட்டின.

தம்மையே நொந்துகொண்டு தனிமையை நாடிக் காவேரிக் கரைக்கு வந்துவிட்டார், குமுறிக்கொண்டு வந்த அழுகையை இவரால் அடக்க முடியவில்லை. -

ஒடுகிறநீரோட்டத்தில் மிதந்து வரும் புதுமலர்போல அழுகைக் கிடை இவருக்கு ஒர் எண்ணம் உதயமாயிற்று.

“சீ! இதற்குப் போய் அழுதுகொண்டிருக்கிறாயே!” அந்த ஆங்கிலப் புத்தகம் ஒன்றைப் படித்தால் போதுமா?

பிரெஞ்சில் நூல்கள் இல்லையா தெலுங்கில், கன்னடத் தில், மராட்டியில், சம்ஸ்கிருதத்தில் நூல்கள் இல்லையா?. எல்லாமொழி நூல்களையும் உன்னால் படிக்க முடியும்ா?

கிடைக்காததற்குப் போய் அழுகிறாயே! கிடைக்கிற

நல்ல பல நூல்களையெல்லாம் படி. மகிழ்ச்சியாக மனத்தை வைத்துக்கொள் என இவரது உள்ளுணர்வில் ஒரு குரல் எழுந்தது. .

அடுத்த கணமே தம் உள்ளத் துயரைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். தமக்குத் தெரிந்த அலங்காரப் பாடல் ஒன்றைச் சொல்லிக்கொண்டு வீடு திரும்பினார். அதற்குப் பின்னரே துறவு மனப்பான்மை கொண்டார்;