பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 48

திருவாசகம் படிக்கிறது: திருப்புகழ் படிக்கிறது; அதற்கு மேல் எதையும் படிக்கிறதில்லை; :

சேலத்தில் படித்துக்கொண்டிருந்த செல் லம் விடுமுறைக்கு அவ்வப்போது மோகனூர் வருவாா: மோகனூர் வந்துவிட்டால் திரும்பச் சேலம் போகும் வரை இவருடனேயே இருப்பார். சிருங்கேரி ஆசார்யரைத் தரிசித்தல் -

ஒருமுறை இவர் மோகனூர் வந்திருந்த சமயம் பூரீமத் சந்திரசேகர பாரதி சுவாமிகள் கொடுமுடிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் சிருங்கேரி சங்கர மடத்துப் பீடாதிபதி. . .

அவரைத் தரிசித்து வரவேண்டுமென்னும் அவா . இவருக்கு உண்டாயிற்று. செல்லம் தாமும் உடன் வருவ தாகச் சொன்னார். . . அங்கே போய்வர இவரிடம் போதுமான பணம் இல்லை. தந்தையாரிடம் கேட்டார். ‘கையில் பணமும் இல்லை; காசுமில்லை’ என்று அவர் கோபத்தோடு சொல்லிவிட்டார். சுவாமிகளோடு இவனும் அவர் போகும் இடங்களுக்கெல்லாம் போய்விடப் போகிறான்: என்கிற பயம் தந்தைக்கு இருந்திருக்கக் கூடும்.

இவருக்கோ, “நடக்கக் கூடியதை நினைக்கவேண்டும். நினைத்ததைச் செய்ய வேண்டும்’ என்கிற மனவுறுதி மிகுதியாக இருந்தது.

தகப்பனார் காசு இல்லை என்றால் என்ன? நடந்தே போவது எனத் தம் கையிலுள்ள கொஞ்சம் பணத்தோடு ஒரு நாள் காலையில் கொடுமுடி நோக்கிக் கால்நடை யாகக் கிளம்பிவிட்டார். செல்லமும் உடன் சென்றார்.

. மோகனூரிலிருந்து காவேரியின் வடகரை வழியாக (சேலம்) வேலூர் சென்றார்கள். பசித்தது; ஒட்டலில் சாப்பிட்டார்கள்.