பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. - . “ நாம் அறிந்த கி.வா.ஜ.

வேலூரிலிருந்து இ வ. ர் க ள் புலிக்கல்பாளையம் போய்ச் சேரும்போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அங்கிருந்து பரிசலில் கொடுமுடி சென்றார்கள். - - c . . .

கையில் பணம் இருந்திருந்தால், இவர்கள் மோகனூரி லிருந்து பரிசலில் காவேரியைத் தாண்டி வாங்கல் போயிருக்கலாம். அங்கிருந்து ஜட்காவில் கரூர் போய், ரெயிலேறிச் சிரமமின்றிக் கொடுமுடி போயிருக்கமுடியும். பணம் இல்லையென்றால் என்ன? மனசில் உறுதி இருந்தது. கால்நடையாகவே இரவு கொடுமுடி வந்து விட்டார்கள். ஆசார்ய சுவாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டி அவர் தங்கியிருக்கும் இடம் சென்றார்கள்.

பணத்தையே பெரிதாக மதிக்கும் உலகம், பணம் இல்லாதவர்களைச் சட்டை செய்யுமா? முள்வேலி போல் சுவாமிகளைச் சூழ்ந்திருந்த பணக்காரப் .ெ ப. ரி ய மனிதர்கள் இவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

இவர்கள் உள்ளம் மறுகியது. சில நொடிகளில், ஆசார்ய சுவாமிகளே பூஜை செய்வதற்கு, வெளித் திண்ணைக்கு வந்துவிட்டார்கள். -

இவர்களுக்கு, முருகன் திருவருளால் ஆசார்ய சுவாமி களின் தரிசனம் நன்றாகக் கிடைத்தது. இரவு அந்த ஊரிலேயே தங்கி மறு நாள் மோகனூர் வந்து விட்டார்கள். - - - -

இதே சிருங்கேரி ஆசார்ய சுவாமிகள் ஒரு முறை கரூருக்கு எழுந்தருளியிருந்தபோது திருமாநிலை யூரில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது இவரைப் பேச அழைத்து, இவர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து 2-4-59-இல் இவருக்குத் தமிழ்க் கவிபூஷணம்” என்ற பட்டத்தை அளித்து, சால்வை போர்த்துக் கெளரவித் .தார்கள். . .