பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳五 நாம் அறிந்த கி. வா. ஜ3.

கொண்டார்; ம ைல யா ள மும் படிக்கக் கற்றுக் கொண்டார் மலையாளத்தில் வந்துகொண்டிருந்த *மனோரமா பத்திரிகையைப் படிப்பார். மலையாளம் பேசினால் புரியும்.

மயூர பவனம் - . --

ஒரு நாள் இவர் காவேரியில் குளித்துக்கொண்டிருந்த போது காலில் ஏதோ தட்டுப்பட்டாற்போல இருந்தது: நீரில் மூழ்கி அதனை எடுத்தார். அது முருகன் சிலை!

கரையில் அப்போது ஜோசியர் சேதுராமலிங்கத்தின் தமையனார் சங்கரையர் நீராடிவிட்டு ஜபம் செய்து கொண்டிருந்தார் . .

இவர் ஆற்றிலிருந்து எடுத்துவரும் சிலையைக் கண்ட வுடன், ‘ஜகந்நாதா, அதை இப்படி என்னிடம் கொடு’ என்று வாங்கிக்கொண்டு நன்றாகப் பார்த்தார். -

“இவரும் அரசமரத்தடிப் பிள்ளையார் பக்கத்தி லேயே இருக்கட்டும்’ என அந்தச் சிலையைக் கொண்டு போய் ஆற்றங்கரை அரசமரத்தடியில், வைத்துவிட்டார். மறு நாள் காலையில் சங்கரையர் இவரைத் தேடிக் கொண்டு இவரது வீட்டிற்கு வந்தர்ராம்.

“என்னை அவரது கையிலிருந்து வாங்கி அரச மரத் தடியில் வைப்பதற்கு நீ யார்? எனக்குத் தனியாக ஒரு கோவில் கட்டு’ என முருகன் அவரது கனவில் வந்து , சொன்னதாக மிகவும் பயத்தோடு சொன்னார்: x

அன்றுமுதல் இவரை அழைத்துக்கொண்டு முனைந்து முருகனுக்குக் கோவில் கட்டப் பண வசூல் செய்தார். போதுமான தொகை வசூலானவுடன், தெரு வாய்க்கால் கரையோரம் இருந்த பிள்ளையார் கோவில் அருகே முருகனுக்கும் ஒரு கோவில் எழுப்பினார்கள். -

இவர் முருகனது சிலையை எடுத்துப்போய் அந்தக் கோவிலில் வைத்தார். கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்: